ஒரு ஆண் ஒரு பெண்ணை அப்ரோச் செய்வது தவறு கிடையாது.. வெறித்தனமாக கிளாஸ் எடுக்கும் நடிகை சோனா!
சென்னை: தமிழ் சினிமாவில் வலம் வந்த கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் நடிகை சோனா. இவர் நடிகையாக ஆசைப்பட்டு சினிமாவுக்குள் வந்தார். ஆனால் தமிழ் சினிமாவில் இருந்த பல நட்சத்திரங்கள் அவரை கிளாமர் நடிகையாக மாற்றிவிட்டார்கள் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இப்படியான நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு ஆண் ஒரு பெண்ணை அப்ரோச் செய்வது என்பது தவறு கிடையாது எனக் கூறியுள்ளார்.
நடிகை சோனா கடந்த சில ஆண்டுகளாகவே லைம் லைட்டில் இல்லாமல் இருக்கிறார். ஆனால் அவரது இளமைக் காலத்தில் அவருக்கு பல முன்னணி நடிகர்கள் தொடங்கி, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தூண்டில் போட்டு கொண்டு இருந்தார்கள். அந்த அளவிற்கு கிரங்கடிக்கும் அழகியாக சோனா இருந்தார்.
இளம் வயதிலேயே சினிமாவில் அவர் காலடி எடுத்து வைத்தாலும், சினிமாவைச் சேர்ந்த பல சூட்சுமங்கள் தெரியாமல் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததாலோ என்னவோ, அவரது வாழ்க்கை இன்றைக்கு முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. காரணம், அவரை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வருவது இல்லையாம். மாறாக, அவரை வைச்சுக்கிறேன் என்ன சொல்ற என்று கேட்கிறார்கள் என அவரே கூறியுள்ளார். அப்படி தன்னிடம் கேட்டவர்களிடம் பயங்கரமாக சத்தம் போட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல், சிலரை முறைத்துப் பார்த்துக் கொண்டே எப்படி இப்படியெல்லாம் ஒரு பெண்ணிடம் கேட்க தைரியம் வருகிறது என்று கேட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

அப்ரோச்: சமீபத்தில் அளித்த பேட்டியில், " ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தால், அந்த பெண்ணை அப்ரோச் செய்வது என்பது தவறான விஷயம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அது நல்ல விஷயம் தான். பிடித்திருந்தால் அப்ரோச் செய்யத்தானே செய்வார். ஆனால் அந்த ஆண் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கண்ணியமாக அப்ரோச் செய்ய வேண்டும். அப்படி அப்ரோச் செய்தும் அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை விட்டுவிட வேண்டும் . அந்தப் பெண்ணைப் போட்டு டார்ச்சர் செய்யக்கூடாது.
Me Too: என்னை அப்படி பலர் அப்ரோச் செய்துள்ளார்கள். தமிழ்நாட்டில் இந்த Me Too டிரெண்ட் ஆவதற்கு முன்னரே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இது தொடர்பாக புகார் கொத்தவள் நான். ஒரு காலத்தில் நானும் பிரேம்ஜியும் காதலிக்கிறோம் என்றெல்லாம் கிசுகிசுக்கள் உலா வந்தது. அதேபோல் நான் சினிமாவுக்கு வந்து தான் பார்ட்டி என்பதை தெரிந்து கொண்டேன். இங்கு வந்துதான் குடிக்கவும் பழகிக் கொண்டேன்.



Click it and Unblock the Notifications











