அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஓபனாக பேசிய கவர்ச்சி நடிகை.. புட்டு புட்டு வைக்கிறாரே ப்பா
சென்னை: பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் கேரக்டர் ரோலில் அறிமுகமானவர் சோனா. அந்தப் படம் வெற்றி பெற்றாலும் சோனா எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்தது. அதாவது திடீரென அவர் கவர்ச்சியின் பக்கம் திரும்பினார். அதன்படி அவர் பத்து பத்து, மிருகம் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தார். இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
நடிகை சோனா கோலிவுட்டில் கவர்ச்சி வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். இப்போது அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் கிளாமர் ரோல்களில் நிறைய நடித்துவிட்டேன். ஒருகட்டத்தில் அது சலிப்பை ஏற்படுத்தியது. அந்த அடையாளத்தை உடைக்க நிறைய வேலைகள் செய்தேன். ஆனால் ஒர்க் அவுட் ஆகவே இல்லை.

அந்த முடிவில் இருந்தேன்: மும்பெல்லாம் சினிமாவை விட்டு சின்னத்திரை பக்கமே செல்லக்கூடாது என்ற முடிவில் இருந்தேன். அதை பல பேட்டிகளில் ஓபனாகவும் சொலியிருக்கிறேன். ஆனால் கிளாமர் நடிகை என்ற அடையாளத்தை உடைக்க தாய்மார்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டி இருந்தது. அதற்கு ஒரே வழி சின்னத்திரைத்தான். இதனால் வேறு வழியே இல்லாமல் சீரியல் பக்கம் சென்றேன்.
தைரியமாக கேட்டேன்: நான் சீரியல்களில் வாய்ப்பு கேட்டபோது; எனக்கு அம்மாவின் ரோலை கொடுங்கள் என்று தைரியமாக கேட்டேன். அப்படிப்பட்ட முடிவை நான் எடுப்பதற்கு நான் போட்டிருக்கிற ஆடைகள், நடிக்கிற காட்சிகள் உள்ளிட்டவற்றை வைத்துதான் மற்றவர்கள் ஈஸியாக என்னை அவள் இப்படித்தான் ப்பா என்று எடை போட்டுவிடுகிறார்கள்.

சகஜமான ஒன்று: நான் திரைத்துறையில் நுழைந்த காலத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது மிகவும் சாதாரண ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது அது ஒரு படி மேலே சென்றிருக்கிறது. அதற்கு இப்போதெல்லாம் இயல்பாக ஓகே சொல்லிவருகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட முடிவை சேர்ந்தது என்பதை கவனிக்க வேண்டும்.
புலம்பிக்கொண்டிருக்கிறேன்: நான் ஆரம்ப காலத்தில் கிளாமர் ரோல்களில் நடித்ததால் அதை பற்றி இப்போதுதான் புலம்பிக்கொண்டிருக்கிறேன். அதனால் ஏற்பட்ட பாதிப்பு முழுவைதையும் நானே அனுபவிக்கிறேன். அதேபோல்தான் அவர்களுக்கும் அது நடக்கும். அதற்கான பாதிப்பு அவர்களை வந்தே தீரும். அதனை நாம் வெளியில் இருந்து சரி, தவறு என்று எடை போடக்கூடாது" என்றார்.


Click it and Unblock the Notifications











