அதுக்குள்ள அப்படி கிளப்பிட்டாய்ங்க.. சோனியா அகர்வால் 2 வது திருமணம் இல்லையாம்.. இதுதான் விஷயம்!

By

சென்னை: நடிகை சோனியா அகர்வால் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதாக வந்த தகவலில் உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது.

செல்வராகவன் இயக்கிய 'காதல் கொண்டேன்' மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சோனியா அகர்வால்.

பிறகு சக்சஸ், கோவில், செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி உட்பட பல படங்களில் நடித்தார்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

இவருக்கும் இயக்குனர் செல்வராகவனுக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்தினார் சோனியா. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2010 ஆம் ஆண்டில் செல்வராகவனை விவாகரத்து செய்தார். அதற்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

திருமண போட்டோ

திருமண போட்டோ

வேதம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குத் திரும்பிய அவர், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அயோக்யா படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்து வரும் சோனியா அகர்வால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமண போட்டோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் இன்னும் 3 நாட்களில் என்று குறிப்பிட்டிருந்தார்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இதனால் அவர் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அதனால்தான் இப்படி போஸ்ட் போட்டிருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். கூடவே, படம் பற்றிய புரமோஷனாகவும் இருக்கலாம் என்றும் விளம்பர படமாக இருக்கலாம் என்று கூறினர். சிலர் அவர் 2 வது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக நினைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

திருமண நிறுவனம்

திருமண நிறுவனம்

இந்நிலையில், அவர் திருமணம் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை சிலருடன் இணைந்து தொடங்கியுள்ளார். சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தை இயக்கியுள்ள ஆனந்த் பால்கி, ஃபேஷன் டிசைனர் ஷிட்னி, 'சமையல் சமையல்' வெங்கடேஷ் பட், பிரியா ஆகியோருடன் இணைந்து இதைத் தொடங்கி உள்ளார். இது தொடர்பான தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் ஆனந்த் பால்கி

இயக்குனர் ஆனந்த் பால்கி

இதுபற்றி இயக்குனர் ஆனந்த் பால்கியிடம் கேட்டபோது, 'நாங்கள் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். திருமணம் என்றால் அதன் முழு பொறுப்பையும் நாங்களே ஏற்றுக்கொள்வோம். இன்றைய திருமணங்களில் பாரம்பரியமாக வரும் விஷயங்களை கடைபிடிப்பதில்லை. அதைக் காப்பாற்றும் விதமாக, நாங்கள் ஏற்பாடு செய்து நடத்தும் திருமண விழாக்கள் இருக்கும். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ முறைப்படியான திருமணங்களை நடத்திக் கொடுக்க இருக்கிறோம்' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X