பட்டப்பகலில் வெட்டவெளியில் கணவருக்கு நச்சு நச்சென லிப்லாக்.. புத்தாண்டை கிக்காக வரவேற்ற பிரபல நடிகை!

சென்னை: புத்தாண்டை முன்னிட்டு பிரபல நடிகை தனது கணவருக்கு வெட்ட வெளியில் முத்தம் கொடுத்து வாழ்த்து கூறும் வீடியோ தீயாய் பரவி வருகிறது.

நாடு முழுவதும் புத்தாண்டு கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பலர் தங்களின் கடந்த ஆண்டு அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர், கடந்த தசாப்தம் குறித்த மிகவும் அழகாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

அதாவது, இத்தாலியின் ரோம் நகரில் நடிகை சோனம் கபூர் தனது விடுமுறையை கழித்து வருகிறார். நேற்று இரவு புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு நேற்று மாலையை அதற்கான கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்.

அழகான காரணங்கள்

அழகான காரணங்கள்

34 வயதான சோனம் கபூர், கடந்த தசாப்தத்தை பிரிலியன்ட் என புகழ்ந்துள்ளார். அதற்கான காரணங்களையும் அழகாக அவர் பட்டியலிட்டுள்ளார்.

அற்புதமான நபர்கள்

அற்புதமான நபர்கள்

அதாவது " கடந்த தசாப்தத்தில் நான் நம்பமுடியாத சில திரைப்படங்களில் நடித்துள்ளேன், அங்கு வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கும் சில அற்புதமான நபர்களை நான் சந்தித்தேன்.

சிறந்த பார்ட்னர்கள்

சிறந்த பார்ட்னர்கள்

நான் ரேகா கபூர் உடன் மூன்று படங்களைத் தயாரித்துள்ளேன், சகோதரிகள் சிறந்த பார்ட்னர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டேன். எங்களின் நீண்ட நாள் ஆசையான பேஷன்துறையையும் தொடங்கிவிட்டோம்.

திருமணம்

திருமணம்

மேலும் என்னுடைய சோல் மெட்டான ஆனந்த் அஹுஜாவை சந்தித்தேன். நாங்கள் திருமணம் செய்துக்கொண்டோம். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை கட்டினோம்.

கற்றுக்கொடுத்தது

கற்றுக்கொடுத்தது

ஆனால் இந்த தசாப்தம் வாழ்க்கை பல பாதைகளைக் கொண்டுள்ளது என்பதையும், சரியான நோக்கங்களைக் கொண்ட ஒரு பாதைதான் ஒருவர் எடுக்க வேண்டிய ஒரே பாதை என்பதையும் எனக்குக் கற்றுக் கொடுத்தது.

அன்பு வழி நடத்தட்டும்

அன்பு வழி நடத்தட்டும்

எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி, படங்களுக்கும் ஃபேஷனுக்கும் நன்றி. நீங்கள் என்னை முழுமையாக்குகிறீர்கள். அன்பு உங்களை வழிநடத்தட்டும்! இவ்வாறு சோனம் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

லிப் டூ லிப் முத்தம்

மேலும் தனது கணவர் ஆனந்த் அஹுஜாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தும் கிக்கேற்றியிருக்கிறார். சோனம் கபூரின் இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். பலர் சோனம் கபூருக்கும் அவரது கணவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X