முன்னாள் காதலிய குறை சொல்வீங்களா? சுஷாந்த் மரணம்.. கெட்ட வார்த்தையால் திட்டும் பிரபல நடிகை!

சென்னை: யாராவது இறந்துவிட்டால் முன்னாள் காதலியை குறை சொல்வீர்களா என கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்திருக்கிறார் பிரபல நடிகை.

பாலிவுட் சினிமாவிள் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று முன்தினம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் தோனியாக நடித்து நாடு முழுக்க பிரபலமான சுஷாந்தின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என இந்திய சினிமா பிரபலங்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

அவரது மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவரது மரணம் தற்கொலைதான் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனிடையே சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியும், சுஷாந்தின் நண்பர்களின் அலட்சியமே அவரது மரணத்திற்கு காரணம் என தெரிவித்தனர்.

நடிகை காட்டம்

நடிகை காட்டம்

சிலர் சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்த போது அவரது காதலி ரியா சக்ரபர்த்தி அவரை விட்டு சென்றதும் அவர் இந்த முடிவை எடுக்க காரணம் என்றும குற்றம்சாட்டினர். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து நடிகை சோனம் கபூர் காட்டமாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, ஒருவரின் மரணத்திற்கு காதலி, முன்னாள் காதலி, குடும்பம், சகாக்கள் மீது பழிபோடுவது அறியாமை என கெட்ட வார்த்தையை பயன்படுத்தி திட்டியிருக்கிறார். சுஷாந்த் தீவிர மன உளைச்சலில் இருந்தபோது அவரது காதலியான ரியா சக்ரபர்த்தி அவரை விட்டுச் சென்றதாக தகவல் எழுந்தது.

காதல் முறிவு

காதல் முறிவு

இதனை தொடர்ந்து சுஷாந்தின் முன்னாள் காதலியான அங்கிதாவுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதும் அவரது மன அழுத்தத்திற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. சுஷாந்தும் அங்கிதாவும் 6 ஆண்டுகள் காதலித்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் தங்களின் காதலை முறித்து கொண்டனர்.

ஆதாரம் இல்லாமல்

ஆதாரம் இல்லாமல்

இந்நிலையில் நடிகை சோனம் கபூரின் இந்த பதிவை பார்த்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், இது குறித்து சட்டம் மிகவும் தெளிவாக உள்ளது. ஒருவர் தற்கொலைக்குத் தூண்டினார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லாவிட்டால், குற்றத்திற்காக யாரையும் குற்றவாளியாக கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X