சிங்கிளாக இருந்தாலும் ஜாலி லைஃப்… ரசிகர்களை கவரும் சோனியா அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
சென்னை: 2000களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு நாயகியாக திகழ்ந்தவர் நடிகை சோனியா அகர்வால், இன்றும் தனது அழகும் ஸ்டைலும் குறையாமல் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மதுர போன்ற படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த சோனியா அகர்வால், இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட் நடிகைகளில் ஒருவராகவே இருக்கிறார்.
சோனியா அகர்வால்: பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிறந்த சோனியா அகர்வால், இயக்குநர் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே கவனம் பெற்றார். தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற கல்ட் படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதோடு திருட்டுப் பயலே, ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களிலும் நடித்து வித்தியாசமான நடிப்பால் முத்திரை பதித்தார்.

மீண்டும் ரீ என்ட்ரி: திருமணத்திற்குப் பிறகு சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தாலும், பின்னர் வானம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அவ்வப்போது தோன்றி வருகிறார். அண்மையில் தனது 44வது பிறந்தநாளை தோழிகளுடன் கோலாகலமாக கொண்டாடிய சோனியா அகர்வால், "சிங்கிளாக இருந்தாலும் சந்தோஷமாக வாழலாம்" என்பதற்கு உதாரணமாக ஜாலியான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிம்பிள் லுக்: இந்த நிலையில், தற்போது சுடிதாரில் செம்ம எலிகண்டாக எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சோனியா. எளிமையான லுக்கிலும் கவர்ச்சி குறையவில்லை என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். "Age is just a number", "இன்னும் அதே அழகு", "90s குயின் இன்னும் மாஸ்" என கமெண்ட்களில் அன்பை பொழிந்து வருகின்றனர். சிம்பிள் சுடிதார் லுக்கிலேயே சமூக வலைதளத்தை கலக்கி வரும் சோனியா அகர்வாலின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றன. ரசிகர்கள் சொல்லுவது ஒன்று தான்... சிங்கிளாக இருந்தாலும் சோனியா செம்ம ஜாலி!


Click it and Unblock the Notifications