வயசு ஒரு நம்பர்தான்னு நிரூபிச்சிட்டீங்க.. செல்வராகவனின் எக்ஸ் வொய்ஃபை பார்த்து ஜொள்ளும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை சோனியா அகர்வால் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வயசு ஒரு நம்பர்தான் என்பதை அவர் நிரூபித்துவிட்டதாக ஜொள்ளு விட்டுள்ளனர்.

சண்டிகரை பூர்விகமாக கொண்டவர் நடிகை சோனியா அகர்வால். தெலுங்கில் வெளியான நீ பிரேமக்கை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து சண்டு என்ற கன்னட படத்தில் அறிமுகமானார் நடிகை சோனியா அகர்வால். இந்தப் படத்தில் நடிகர் சுதீப்புக்கு ஜோடியாக நடித்தார்.

தனுஷுடன் காதல் கொண்டேன்

தனுஷுடன் காதல் கொண்டேன்

தனது மூன்றாவது படத்தில் மூன்றாவது மொழியாக தமிழில் நடித்தார் சோனியா அகர்வால். அந்தப் படம் தான் காதல் கொண்டேன். செல்வராகவன் இயக்கிய இந்தப் படத்தில் திவ்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் சோனியா அகர்வால்.

பல மொழிகளில் பிஸியான சோனியா

பல மொழிகளில் பிஸியான சோனியா

இந்தப் படத்தின் மூலம் பெரும் பிரபலமானார் சோனியா அகர்வால். இந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றார் சோனியா அகர்வால். பின்னர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல மொழிகளில் நடித்து வந்தார் சோனியா அகர்வால்.

7 ஜி ரெய்ன்போ காலனி

7 ஜி ரெய்ன்போ காலனி

விஜய், சிம்பு, தனுஷ், ஆர்யா, ஸ்ரீகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். காதல் கொண்டேன் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 7ஜி ரெய்ன்போ காலனி, கோவில், மதுரை, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

 செல்வராகவனுடன் காதல் - திருமணம்

செல்வராகவனுடன் காதல் - திருமணம்

செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், 7ஜி ரெய்ன்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்தார். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து 2006ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்தார் சோனியா அகர்வால்.

கசந்த திருமணம் - பரஸ்பரம் விவாகரத்து

கசந்த திருமணம் - பரஸ்பரம் விவாகரத்து

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்தார் நடிகை சோனியா அகர்வால். பின்னர் தனது கணவர் செல்வராகவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் அவரை பிரிந்தார். 2010ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர்.

தற்போது 4 படங்கள் கைவசம்

தற்போது 4 படங்கள் கைவசம்

அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார் சோனியா அகர்வால். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார் சோனியா அகர்வால். தற்போது பஹீரா, வார்டு 126, காதலை தேடி நித்யா நந்தா, ஷ்.. ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சோனியா அகர்வால்.

சீரியல்களில் நடித்த சோனியா அகர்வால்

சீரியல்களில் நடித்த சோனியா அகர்வால்

சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சீரியலிலும் நடித்து வந்தார் சோனியா அகர்வால், கலைஞர் தொலைக்காட்சியில் நாணல், புதுயுகம் தொலைக்காட்சியில் மல்லி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அச்சம் தவிர், சன் தொலைக்காட்சியில் பாண்டவர் இல்லம் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

மஞ்சள் நிற பார்டர் கரும் பச்சை பட்டு

மஞ்சள் நிற பார்டர் கரும் பச்சை பட்டு

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் சோனியா அகர்வால். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற பார்டரில் கரும் பச்சை நிற பட்டு சேலையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் சோனியா அகர்வால். அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

வயது என்பது வெறும் நம்பர்தான்

வயது என்பது வெறும் நம்பர்தான்

அதில் கையில் வளையல், கழுத்தில் நெக்லெஸ், காதில் ஜிமிக்கி, தலை நிறைய பூ என குடும்ப குத்து விளக்காக போஸ் கொடுத்துள்ளார் சோனியா அகர்வால். சோனியா அகர்வாலின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வயது என்பது வெறும் நம்பர்தான் என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

மீண்டும் புன்னகையுடன் பார்ப்பதில் மகிழ்ச்சி

மீண்டும் புன்னகையுடன் பார்ப்பதில் மகிழ்ச்சி

சில நெட்டிசன்கள் உங்களை மீண்டும் புன்னகையுடன் பார்ப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர். சில நெட்டிசன்கள் இந்த ட்ரெடிஷ்னல் லுக் உங்களுக்கு செமயாக இருக்கிறது என்றும், பியூட்டிஃபுல், க்யூட் என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X