'தண்ணி' பார்ட்டியில் சோனியா அகர்வால் உற்சாகம்
சென்னையில் சமீபத்தில் நடந்த தண்ணிப் பார்ட்டியில் நடிகை சோனியா அகர்வாலும் கலந்து கொண்டு சிறப்பித்ததைக் காண முடிந்தது.
அது ஒரு பிறந்த நாள் விழா கொண்டாட்ட பார்ட்டி. சென்னையின் முக்கியமான பப்களில் ஒன்றான பாஷாவில் கடந்த ஞாயிறன்று இந்த பார்ட்டி நடைபெற்றது. ஏகப்பட்ட ஆண்களும், பெண்களும் வண்ண வண்ண உடைகளில் உற்சாகம் பொங்க கலந்து கொண்டனர்.
இளைஞர்கள், இளைஞிகளின் கூட்டத்தால் பப் உற்சாகம் பொங்கக் காணப்பட்டது. மாலை நேர ரம்மியத்தை விட இவர்களின் உற்சாகம்தான் மிகப் பெரிய அம்சமாக காணப்பட்டது.

மது விருந்து
மது விருந்து, வயிற்றுக்கு உணவு விருந்து, செவிக்கு இசை விருந்து, கண்ணுக்கு நடன விருந்து என தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிரபலங்கள் பங்கேற்பு
நள்ளிரவைத் தாண்டியும் நடந்த இந்த பார்ட்டியில் ஏராளமான பிரபலங்களும் தலை காட்டினர். இசையைக் கேட்டபடி, ஆடியபடி, சிரித்தபடி, பேசியபடி, உற்சாகமாக, உல்லாசமாக நடந்தது. இந்த பார்ட்டியில் நடிகை சோனியா அகர்வாலையும் காண முடிந்தது.

சோனியா அகர்வால்
ஒரு நேரத்தில் பிசியான நடிகையாக வலம் வந்த சோனியா இப்போது அப்படி இல்லை. எனவே இதுபோன்ற பார்ட்டிகளில் அவரை அதிகம் காண முடிகிறது. சோனியாவும் உற்சாகமாக இந்த பார்ட்டியில் கலந்து கொண்டார்.

விவாகரத்துக்குப் பின்னர்
டைரக்டர் செல்வராகவனுடான விவாகரத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நடிகை சோனியா அகர்வால், முன்பை விட உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறியிருக்கிறார்.

பார்ட்டிகளில் சோனியா
இந்நிலையில் சினிமா பிரபலங்கள் கொடுக்கும் பார்ட்டிகள் என்றால் அதில் தவறாது கலந்து கொள்கிறாராம் சோனியா. இதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது.

சீரியலில் வாய்ப்பு
பார்ட்டி என்றால் பல பேர் வருவார்கள். புதிதாக பலர் அறிமுகமாவார்கள். அதன் மூலம் படவாய்ப்புகள் கிடைக்கும் என்பது சோனியாவின் கணிப்பு. அந்த கணிப்புக்கு ஏற்ப புதுயுகம் டிவியில் மல்லி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவில் வாய்ப்பு
அதேபோல சினிமாவில் குணசித்ர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, ஒரு கை பார்த்துவிடலாம் என்று கிடைக்கும் வாய்ப்புகளை ஒப்புக் கொள்கிறாராம்.


Click it and Unblock the Notifications











