அவருக்காக காத்திருக்கிறேன்.. இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்த சோனியா அகர்வால்!

சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சோனியா அகர்வால் இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

நினைத்து நினைத்துப்பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்...உன்னால் தானே நானே வாழ்கிறேன்.. 7ஜி ரெயின்போ காலனி படத்தில் வரும் இந்த பாடலில் அழகு பதுமையாக வலம் வந்த சோனியா அகர்வாலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.

படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், இன்று வரை இளம் 20K கிட்ஸ்களின் பேவரைட் பாடலாக இந்த பாடல் உள்ளது.

சோனியா அகர்வால்

சோனியா அகர்வால்

பிரபல இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் அறிமுக சோனியா அகர்வால் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். அதன் செல்வராகவன் இயக்கத்தில் ஹிட் படங்களான ரெயின்போ காலனி, புதுக்கோட்டை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

விவாகரத்து செய்தார்

விவாகரத்து செய்தார்

செல்வராகவனுடன் படங்களில் இணைந்து நடித்த போது இவருக்கும் இயக்குனருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மிகவும் மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையை தொடங்கிய அவர்கள் சில ஆண்டுகளிலேயே கருத்துவேறுபாடு காரணமாக பிறந்தனர். சோனியவை விவாரத்து செய்த பின் செல்வராகவன் கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரண்டு மகனும் உள்ளனர்.

Fall வெப் தொடரில்

Fall வெப் தொடரில்

செல்வராகவனை விவாகரத்து செய்த பின் சோனியா அகர்வால் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்,அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கத்தில் க்ரைம், த்ரில்லர் திரைப்படமான கிராண்மா திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்தார். அதன் பின் WARD 125 படத்திலும் நடித்தார். சமீபத்தில், டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக Fall என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.

சுவாரசியமான தொடர்

சுவாரசியமான தொடர்

இந்நிலையில், Fall வெப் தொடரில் நடித்தது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த சோனியா அகர்வால், இந்த தொடர் ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரசியம் கொஞ்சமும் குறையாமல் இருக்கும். அனைவரும் பார்க்கும் படி இந்த வெப் தொடர் இருக்கும்,அதில் பிபி சரணின் மனைவியாகவும், ஒரு குழந்தையின் தாயாகவும் நான் நடித்து இருக்கிறேன் என்றார்.

அவருக்காக காத்திருக்கிறேன்

அவருக்காக காத்திருக்கிறேன்

இதைத்தொடர்ந்து, சோனியாவிடம் இரண்டாம் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சோனியா அகர்வால், இன்னும் எத்தனை நாள், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பேன் என்பது எனக்கு தெரியவில்லை. சரியான நபரை நான் சந்திக்கும் போது அது நடக்கலாம். அவருக்காக நானும் காத்திருக்கிறேன். ஆனால், இப்போது வரை எனக்கான ஒருவரை நான் சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X