Sree Leela: காதலுக்கு வாய்ப்பே இல்லை.. அதிரடியாக திருமணத்தை அறிவித்த ஸ்ரீலீலா.. செம பிளான்!
சென்னை: கன்னட நடிகை ஸ்ரீலீலா தற்போது தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விரைவில் பாலிவுட் மற்றும் கோலிவுட்டிலும் அவர் கால் பதிக்க உள்ளார். பாலிவுட்டில் அதிக வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், ஸ்ரீலீலாவின் திருமணம் குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
சினிமா நட்சத்திரங்களின் காதல், திருமணம் குறித்த செய்திகள் புதிதல்ல. சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு, இத்தகைய செய்திகள் அதிகளவில் பரவி வருகின்றன. கார்த்திக் ஆர்யனுடன் ஸ்ரீலீலா காதலில் விழுந்துவிட்டார், விரைவில் திருமணம் என்றெல்லாம் செய்திகள் முன்பு வெளியாகின. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீலீலா கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதாவது, "நான் காதலில் இருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் என்னுடைய அம்மா எப்போதும் என்னுடன் இருக்கிறார். அம்மா கூடவே இருப்பதால் நான் எப்படி காதலில் விழ முடியும்? இருப்பினும், இதுகுறித்து வதந்திகள் பரவி வருகின்றன.

திருமணம் எப்போது?: சமீபத்தில் ஸ்ரீலீலா மணப்பெண் போல அலங்கரித்திருந்த புகைப்படங்கள் வைரலாகின. அதைப் பார்த்த சிலர் திருமணம் முடிந்துவிட்டது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும், அவரை கூடையில் தூக்கி வரும் புகைப்படமும் பரவியது. அது அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் அது எங்கள் பாரம்பரியம் என்றும் அந்த பேட்டியில் அவர் கூறினார். திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீலீலா, "எனக்கு இப்போது தான் 23 வயது. இன்னும் 10 வருடங்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை" என்று கூறியுள்ளார். அதாவது, 33 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்துகொள்வார் என்பதை ஸ்ரீலீலா மிகத் தெளிவாக கூறிவிட்டார். 33 வயதுக்குப் பிறகு தான் திருமணம் என ஸ்ரீலீலா எடுத்திருக்கும் முடிவானது அவரை சினிமாவில் மிகவும் சுதந்திரமான முடிவுகளை எடுக்க தடை ஏதும் இல்லாமல் இருக்கும் என்பதால்தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதிக சம்பளம்: தற்போது ஸ்ரீலீலா, ஜனார்தன ரெட்டியின் மகன் கிரீட்டியுடன் இணைந்து 'ஜூனியர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கிரீட்டியை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது என பலரும் விமர்சிக்கிறார்கள். அந்த அளவிற்கு அவரது கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகர்கிறது. இப்படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்திருப்பது மட்டும் இல்லாமல் அதிக சம்பளமும் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

லைன் -அப்: ஸ்ரீலீலா கைவசம் இருக்கும் திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால், தெலுங்கில் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் 'ஆஷிகி-3' படத்தில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பல கதைகளை கேட்டு வருகிறார். 'ஆஷிகி-3' வெளியாவதற்கு முன்பு மற்றொரு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். புஷ்பா 2 படத்தில் இவர் நடனமாடிய கிஷ்க் பாடல் அவருக்கு இந்திய அளவில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. எனவே பராசக்தி படத்திற்கு பின்னரும் ஸ்ரீலீலாவுக்கு தமிழிலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











