நடிகர் முன்பே நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. ஜீரோ ஆன ஹீரோ.. கொந்தளித்த நெட்டிசன்கள்
மும்பை: தென்னிந்தியாவில் சென்சேஷனல் ஹீரோயினாக வலம் வரும் ஸ்ரீலீலாவிற்கா இப்படி ஒரு நிலமை என நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். டார்ஜிலிங்கில் படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில் ஹீரோ முன்னாடியே ஸ்ரீலீலாவிற்கு நடந்த சம்பவம் தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் ஹீரோவை பார்த்து படத்தில் தான் அவர் ஹீரோ நிஜத்தில் ஜீரோ என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கடந்தாண்டு வெளியான புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற கிஸ்ஸிக் பாடல் மூலம் இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தவர் ஸ்ரீலீலா. இவர், ரவிதேஜா, மகேஷ் பாபு படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிதது வருகிறார். இப்படத்தின் மூலம் தமிழில் ஸ்ரீலீலா அறிமுகம் ஆகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடன புயல்: ஸ்ரீலீலாவின் நடனத்திற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர். தென்னிந்திய நடிகர்களுக்கே சவால் விடும் வகையில் இவரது நடனம் படு ஸ்பீடுதான். நடன அசைவுகளை கண்டு ரசிகர்கள் வியந்து பார்ப்பார்கள். கடந்தாண்டு வெளியான புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அல்லு அர்ஜூனுவிற்கு இணையாக நடனம் ஆடி அசத்தயிருப்பார் ஸ்ரீலீலா. ராபின்ஹுட், பவன் கல்யாணுடன் உஸ்தாத் பகத் சிங், ரவி தேஜாவுடன் மாஸ் ஜாதரா படங்களில் இவர் நடித்து முடித்துள்ளார். தென்னிந்தியாவில் பிரபலமான இவர் தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குநர் அனுராக் பாசு இயக்கும் அந்த படத்தில் பாலிவுட்டின் இளம் நாயகன் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் நடிகர் இப்ராகிம் அலி கானுடன் மும்பையில் காணப்பட்ட புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நடிகருடன் காதலா?: கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து நடித்து வரும் நிலையில், ஸ்ரீலீலா, கார்த்திக் ஆர்யனை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் இணைந்து டேட் செய்வதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் கார்த்திக் ஆர்யன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீலீலா கலந்துகொண்ட புகைப்படங்களும் வெளியானது. மேலும், இவர்களது காதலை உறுதிப்படுத்தும் விதமாக கார்த்திக் ஆர்யனின் அம்மா, என் வீட்டிற்கு வரும் மருமகள் ஒரு மருத்துவராக இருக்கலாம் என தெரிவித்தார். என் மகனை புரிந்துகொண்டவராக இருப்பார் என தெரிவித்தார். இந்நிலையில், ஸ்ரீலீலா வெளிநாட்டில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவரும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இருவரும் காதலிப்பது உண்மைதான் என்ற செய்திகள் வெளியாகின. அதேபோன்று சமீபத்தில் டார்ஜிலிங்கில் நடந்த படப்பிடிப்பின் போது ஸ்ரீலீலாவுடன் ரொமான்ஸ் செய்வது போன்ற புகைப்படம் வெளியானது.

ஸ்ரீலீலாவுக்கு நேர்ந்த அதிர்ச்சி: டார்ஜிலிங்கில் நடந்த படப்பிடிப்பின் போது அங்கு ரசிகர்கள் கூடினர். அப்போது ரமத்தியில் கார்த்திக் ஆர்யனும், நடிகை ஸ்ரீலீலாவும் நடந்து சென்றனர். அப்போது சிலர் ஸ்ரீலீலாவை இழுத்தனர். உடனே பாதுகாவலர்கள் ஸ்ரீலீலாவை மீட்டனர். அப்போது கார்த்திக் ஆர்யன் இதை கண்டுகொள்ளாமல் நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. கார்த்திக் ஆர்யன் முன்பே ஒரு நடிகைக்கு இப்படி நடப்பதை வேடிக்கை பார்க்கும் அவர், படத்தில் தான் ஹீரோ, நிஜத்தில் ஜீரோ என நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இதை பார்த்த நெட்டிசன்கள் எங்கேப்பா கடத்திட்டு போறீங்க என்றும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











