Sreeleela: விஜய்க்கு நோ.. அஜித்திற்கு யெஸ்.. நடிகை ஸ்ரீலீலாவின் வேற லெவல் பிளான்!
சென்னை: நடிகை ஸ்ரீலீலா தெலுங்கில் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கன்னட நடிகையான இவர் அடுத்தடுத்து தெலுங்கு நடிகர்களுடன் கமிட்டாகி வருகிறார். மகேஷ் பாபுவுடன் அவர் சமீபத்தில் குண்டூர் காரம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்தப் படத்தின்மூலம் ஸ்ரீலீலா ஏராளமான ரசிகர்களை சென்றடைந்துள்ளார். படம் கலையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தில் குர்ச்சி மடத்தாபட்டி என்ற பாடல் தொடர்ந்து youtube-ல் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதையடுத்து ஸ்ரீலீலாவிற்கு தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் கதவை கட்டுகின்றன. ஆனாலும் அம்மணி நிதானமாகவே தன்னுடைய படங்களை தேர்ந்தெடுத்து ஓகே சொல்கிறாராம். அந்த வகையில் அடுத்ததாக அவர் தமிழில் எந்த ஹீரோவுடன் இணைகிறார் என்பது குறித்து அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. விரைவில் ஸ்ரீலீலாவை தமிழ் படங்களில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.

நடிகை ஸ்ரீலீலா: நடிகை ஸ்ரீலீலா கன்னடத்தில் தன்னுடைய முதல் பட என்ட்ரியை கொடுத்துள்ள போதிலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக மகேஷ்பாபு உள்ளிட்ட லீடிங் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இளம் நடிகையான அவர் தொடர்ந்து இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரை தமிழிலும் என்ட்ரி கொடுக்க வைக்க முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விரைவில் தமிழ் படத்தில் கமிட்டாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகவுள்ள குட் பேட் அக்லி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அஜித்துடன் இணையும் ஸ்ரீலீலா?: இதுகுறித்து விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். படத்தில் அவர் அஜித்திற்கு ஜோடியா என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய வயதிற்கு ஏற்ற வகையில் நடிகைகளை தன்னுடைய படங்களில் இணைத்து வருகிறார் அஜித். அந்த வகையில் வித்யா பாலன், மஞ்சு வாரியர், திரிஷா உள்ளிட்டவர்களுடன் அவர் நடித்து வருகிறார். ஆனால் ஸ்ரீலீலாவிற்கு தற்போது 22 வயது தான் ஆகிறது என்பதால் அஜித் தன்னுடைய கொள்கையிலிருந்து முரண்பட்டு ஸ்ரீலீலாவுடன் ஜோடி சேருவாரா என்பது சந்தேகம்தான்.
விஜய்க்கு நோ சொன்ன ஸ்ரீலீலா?: ஆனால் குட் பேட் அக்லி படத்தில் ஸ்ரீலீலா முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுவதால் அவரது கேரக்டர் என்னமாதிரியாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் பாடல் ஒன்றிற்கு ஸ்ரீலீலா இணைந்து ஆட்டம் போட உள்ளதாக கூறப்பட்டது. முன்னதாக நடிகை திரிஷாவும் இந்த படத்தின் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளதாக கூறப்பட்ட சூழலில் ஸ்ரீலீலா GOAT படத்தின் ஐட்டம் சாங்கிற்கு நடிக்க ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் திரிஷா -விஜய் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.
சிறப்பான டான்சர்: தமிழில் தன்னுடைய என்ட்ரி சிறப்பாக அமைய வேண்டும் என்று ஸ்ரீலீலா நினைப்பதாகவும் அதனால் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடுவதை தவிர்க்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அடுத்ததாக அஜித்துடன் இணையுள்ள ஸ்ரீலீலா அடுத்தடுத்து இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே தன்னுடைய படங்களில் டான்ஸ் மூவ்மெண்ட்களுக்காக மிகச்சிறப்பான பாராட்டுக்களை பெற்று வருபவர் ஸ்ரீலீலா. இவர் விஜய்யுடன் இணைந்து போடும் ஆட்டத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த சூழலில், இது இல்லை என்று தெரியவந்துள்ளது அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











