Sreeleela: ஸ்ரீவள்ளி ஐ லவ் யூ.. கிஸ்ஸிக் நாயகி சொன்ன விஷயம்.. ராஷ்மிகா ரிப்ளைதான் ஹைலைட்!
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ஸ்ரீலீலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் ரிலீசை பாட்னாவில் நடத்தி முடித்த படக்குழுவினர் நேற்றைய தினம் சென்னையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டையும் ப்ரீ ரிலீஸ் ஈவென்டையும் நடத்தினர். இதில் அல்லு அர்ஜுன், ஸ்ரீலீலா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை களைகட்ட வைத்தனர்.

புஷ்பா 2 படம்: நடிகர் அல்லு அர்ஜுன் -சுகுமார் கூட்டணியில் உருவாகியுள்ள புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாட்னாவில் இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் படத்தின் கிஸ்ஸிக் பாடல் வெளியீடு மற்றும் பிரீ இவண்ட் நிகழ்ச்சியும் பிரம்மாண்டமான வகையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். தமிழில் விஜய், ரஜினிகாந்த் போன்றவர்களுக்கு கூடும் ரசிகர்கள் கூட்டத்தை இந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.
மாஸ் காட்டிய அல்லு அர்ஜுன்: தான் பிறந்த மண்ணிற்கு தான் செய்யும் மரியாதை என்று இந்த நிகழ்ச்சியில் தமிழிலேயே அல்லு அர்ஜுன் பேசி ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அவர் தனது 20 வயதுவரை சென்னையில் வசித்ததையும் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா மற்றும் ஸ்ரீலீலா இருவரும் இணைந்திஇருந்தனர். இயக்குநர் சுகுமாரன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இருந்தபோதிலும் படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மிக சிறப்பான பேச்சை கொடுத்திருந்தார்.
ராஷ்மிகாவை பாராட்டிய ஸ்ரீலீலா: இதேபோல நடிகை ஸ்ரீலீலா, ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் என அனைவரது பேச்சும் இந்த நிகழ்ச்சியில் மிகுந்த கவனத்தை பெற்றிருந்தது. குறிப்பாக ராஷ்மிகா மந்தனா தன்னுடைய காதல் குறித்தும் வருங்கால கணவர் குறித்தும் பேசியது ரசிகர்களை மிகச் சிறப்பாக என்டர்டெயின் செய்தது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீலீலா, ரசிகர்களை கவரும் வகையில் பேசியிருந்தார். க்யூட்டான நடனத்தையும் ஆடி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார். ஸ்ரீவள்ளி என ராஷ்மிகாவை குறிப்பிட்டு அவரை அவரது நடிப்பை அவர் தனக்கு சூட்டிங்கின்போது செய்த சப்போர்ட்டையும் பாராட்டி பேசி இருந்தார்.
ஐ லவ் யூ என கொஞ்சல்: இந்த தலைமுறையில் ஒருவரையொருவர் நேசிப்பதை மீம்ஸ் போட்டுதான் ஷேர் செய்ய வேண்டியுள்ளது என்றும் தான் கண்டிப்பாக ராஷ்மிகாவிற்கு மீம்ஸ் அனுப்புவேன் என்றும் ஸ்ரீலீலா குறிப்பிட்டுள்ளார். ஐ லவ் யூ என்றும் ராஷ்மிகாவை பார்த்து ஸ்ரீலீலா குறிப்பிட்டதை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதற்கு ராஷ்மிகா மந்தனாகவும் கீழிருந்து க்யூட்டான ரியாக்ஷனை செய்திருந்தார். வழக்கமான அவரது சிரிப்பையும் ஸ்ரீலீலாவிற்கு பரிசாக கொடுத்திருந்தார். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஒருவருக்கொருவர் உற்சாகமாக பேசிக்கொண்டதையும் முத்தங்களை பரிமாறிக் கொண்டதையும் பார்க்க முடிந்தது .இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு அல்லு அர்ஜுன் என்ன மாதிரியான ரியாக்ஷன் செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்ததையும் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











