அந்த நடிகரை காதலிக்கிறாரா..? நடிகை திடீர் மறுப்பு.. காதல் திருமணத்தை விரும்பவில்லையாமே!

By

சென்னை: தான் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக வரும் தகவலை மறுத்துள்ளார் நடிகை ஶ்ரீமுகி.

தங்கசாமி இயக்கிய எட்டுத்திக்கும் மதயானை படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தவர் ஶ்ரீமுகி.

தெலுங்கு நடிகையான இவர், தமிழில் வேறு படங்களில் நடிக்கவில்லை. இப்போது ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

நேனு சைலஜா

நேனு சைலஜா

தெலுங்கில், ஜுலாயி என்ற படத்தில் அல்லு அர்ஜுனின் சகோதரியாக அறிமுகமான இவர், பிரேமா இஸ்க் காதல் என்ற படம் மூலம் ஹீரோயின் ஆனார். பிறகு நேனு சைலஜா, சாவித்ரி, ஜென்டில்மேன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களில் இவருடைய நடிப்பு கவனிக்கப்பட்டது.

போட்டோஷூட்

போட்டோஷூட்

பல சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார். இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த கொரோனா காலகட்டத்தில், ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி புதிது புதிதாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதில் கிளாமர் புகைப்படங்களும் அடங்கும்.

தெலுங்கு பரபரப்பு

தெலுங்கு பரபரப்பு

இந்நிலையில், இவர் காதலில் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தெலுங்கு சினிமாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவலை நடிகை ஶ்ரீமுகி மறுத்துள்ளார்.

பெற்றோர் சம்மதம்

பெற்றோர் சம்மதம்

இதுகுறித்து ஶ்ரீமுகி கூறும்போது, நான் காதல் திருமணத்தை விரும்பவில்லை. யாரையாவது விரும்பினால், என் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வேன். இதுதான் உண்மை, நான் யாரையோ காதலிப்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X