For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க... கடைசிவரை அது தொல்லைதான்... ஓப்பனாக பேசிய ஸ்ரீநிதி மேனன்!

  |

  சென்னை: விஜய் டிவியின் செந்துரப்பூவே சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி மேனன்.
  சீரியல், சினிமா என பிஸியாக இருக்கும் ஸ்ரீநிதி மேனன், தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

  அதில், நடிக்க வேண்டும் என்றால் அட்ஜ்ஸ்ட் செய்துகொள்ள வேண்டும் என சிலர் கூறியது பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

  பீஸ்ட் பட ஹீரோயினுக்கு பிராக்கெட் போட்ட சல்மான் கான்... மீண்டும் 56 வயதில் தொடங்கிய காதல் கணக்குபீஸ்ட் பட ஹீரோயினுக்கு பிராக்கெட் போட்ட சல்மான் கான்... மீண்டும் 56 வயதில் தொடங்கிய காதல் கணக்கு

  செந்தூரப் பூவே ஸ்ரீநிதி மேனன்

  செந்தூரப் பூவே ஸ்ரீநிதி மேனன்

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகளில் தலைக்காட்டும் பலரும் செலிபிரிட்டிகளாக கலக்கி வருகின்றனர். அந்த வரிசையில் செந்துரப் பூவே சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ஸ்ரீநிதி மேனன். சீரியல், சினிமா என பிஸியாக வலம் வரும் ஸ்ரீநிதி மேனன், நடிக்க வரும் முன் தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "சினிமாத்துறையில் தான் வந்த நாளில் இருந்தே பாலியல் ரீதியான தொல்லைகள் இருந்து வருகிறது" என ஓப்பனாக கூறியுள்ளார்.

  எல்லாமே எனக்கு அம்மா தான்

  எல்லாமே எனக்கு அம்மா தான்

  இந்தப் பேட்டியில் தொடர்ந்து பேசியுள்ள ஸ்ரீநிதி மேனன், "எனக்கு சென்டிமெண்ட்டான காட்சிகளில் கிலிசரின் பயன்படுத்த மாட்டேன். எதையாவது ஒன்றை நினைத்து அழுதபடி நடித்துவிடுவேன். ஆனால், நான் எதை நினைத்து அழுவேன் என்று மட்டும் கேட்க வேண்டாம். ஒருவேளை நான் நடிக்க வரவில்லை என்றால் ரைடர் ஆகியிருப்பேன். என்னுடைய எல்லாவற்றையும் தீர்மானிப்பது அம்மா தான். அவங்க இல்லைன்னா நானும் இல்லை" என பேசியுள்ளார்.

  கிளாமர் ட்ரெஸ் செட் ஆகாது

  கிளாமர் ட்ரெஸ் செட் ஆகாது

  தொடர்ந்து பேசியுள்ள அவர், "இன்ஸ்டாகிராமில் கிளாமரான ட்ரெஸ் போட்டு எடுத்த போட்டோக்களை ஷேர் செய்ய மாட்டேன். எனக்கு எது செட்டாகுமோ அதுதான் போடுவேன். 'என்ன... எதுவுமே காட்ட மாட்றீங்க' என்றெல்லாம் சிலர் கமெண்ட்ஸ் பண்ணுவாங்க. 'நான் என்ன காட்டணும்...?' இதையெல்லாம் நான் அவமானமா பார்க்க மாட்டேன். ஆனா சிரிப்பு தான் வரும். நான் மத்தவங்க மாதிரி இருக்க மாட்டேன், எனக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு, அதுதான் எனக்கு செட்டாகும்" என ஒப்பனாகக் கூறியுள்ளார்.

  அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க

  அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க

  மேலும், "எனக்கு இன்ஸ்டாவில் வரும தவறான மெசேஜ்களை நான் பெரிதாக கண்டுகொள்ளமாட்டேன். ஆனால், அம்மா தான் ரொம்ப வருத்தப்படுவார். சினிமாவுக்கு ஆரம்பத்தில் வரும் போது, அட்ஜஸ்ட் பண்ணுங்கன்னு சொல்லுவாங்க. சாப்பாடு, சம்பளத்தில் தான் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்றாங்கன்னு நினைத்ததுண்டு. அதனால் நானும், விபரம் தெரியாமல் சாப்பாடு, சம்பளம் தானே அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன் என்பேன். அதன்பிறகு தன் அது என்னவென்றே புரியும். நமக்கு விருப்பமில்லை என்றால், ஆரம்பத்திலேயே அதை ரிஜக்ட் செய்திட வேண்டும். பார்த்துக்கொள்ளலாம், சமாளித்து கொள்ளலாம் என நினைத்து வாய்ப்புக்காக சரி என்று கூறிவிட்டால், கடைசி வரை அது தொல்லையாகி கெட்ட பெயரும் வந்துவிடும்." எனக் கூறியுள்ளார்.

  மிரட்டலுக்கு பயப்பட வேண்டாம்

  மிரட்டலுக்கு பயப்பட வேண்டாம்


  தொடர்ந்து பேசியுள்ள ஸ்ரீநிதி மேனன், "ஆரம்பத்தில் இது மாதிரி கேட்பவர்கள், வாய்ப்புகளை கூறி நம்மை மிரட்டுவார்கள். இது இல்லையென்றால், எங்கு போய் வேண்டுமானால்ம் வேலை பார்க்கலாம் என இதை எதிர்கொள்ள வேண்டும். என்னுடைய நண்பரின் நண்பர் ஒருவர். அவர்தான் என்னை இந்த துறைக்கு கொண்டு வந்ததாகக் கூறுவார். இதுபோல நயன்தாரா, சமந்தா ஆகியோரை எல்லாம் நான்தான் சினிமாவுக்கு அழைத்து வந்தேன் என்பார்கள். இப்படி முன்வைக்கும் ஆசை வார்த்தைகளை நம்பினால் அவ்வளவு தான். எனவே நாம் தான் துணிந்து முடிவு எடுக்க வேண்டும்." என்று ஸ்ரீநிதி மேனன் பேட்டியில் கூறியுள்ளார்.

  English summary
  Sreenithi Menon is busy acting in serials and movies. In this case, Sreenithi Menon has opened her mind about coming to act and getting the opportunity.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X