twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “இனிமே ஃபுல் கவர்ச்சிதான்” – திடீர் மனமாற்றத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா

    |

    சென்னை: "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தில் அறிமுகமான ஆந்திர நடிகையான ஸ்ரீதிவ்யா அதன்பின் கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்க தயங்கியதால் பெரிய பட்ஜெட் படங்கள் நழுவிச் சென்றன.

    அதனால், ஆற அமர யோசித்து பார்த்த ஸ்ரீதிவ்யா தற்போது நடிக்கும் புதிய படங்களில் இயக்குனர்கள் எதிர் பார்த்ததை விட கூடுதல் கவர்ச்சி சேவை ஆற்றி வருகிறார்.

    இதுபற்றி, ஸ்ரீதிவ்யா கூறுகையில் "முதல் படத்தில், என்னை கிராமத்து வேடத்தில் பார்த்து ரசித்த ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தனர். அதனால், குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்பினேன்.

    ஆனால், டைரக்டர்கள் விரும்பும் நடிகையாக இருந்தால்தான் சினிமாவில் வளர முடியும் என்பதால் இப்போது நானும் கவர்ச்சிக்கு தயாராகி விட்டேன். இனிமேல் நடிக்கும் படங்களில், கவர்ச்சி தேவதையாக ஜொலிக்கப் போகிறேன்' என்று கூறியுள்ளார்.

    Actress Sri Divya going to act attractive roles…

    அவர் தற்போது, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் "பென்சில்" படத்தில் அவருடன் இணைந்து கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Sri Divya says that here after, she will act like modern and attractive roles in Tamil films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X