இதுல அவ்ளோ சீன் இல்லையே.. ஏன்டா இப்படி கலாய்க்கறீங்க ஸ்ரீதிவ்யாவை!

சென்னை : ஶ்ரீதிவ்யா புது போட்டோசூட்டை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஶ்ரீதிவ்யா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை. இவர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் அறிமுகமானவர். இவர் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து இனிமேல் இவர் தான் நமது கனவு நாயகி என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து அசத்தியவர் ஶ்ரீதிவ்யா .

 Actress sri divya latest pictures

ஶ்ரீதிவ்யா கடைசியாக தமிழில் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் .2017ல் வெளியான இந்த படம் தான் ரசிகர்கள் ஶ்ரீதிவ்யாவை கடைசியாக திரையில் கண்ட படம். இந்த படமே பெரிய வெற்றி படம் என்று சொல்ல முடியாது. அட்லி தயாரித்திருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களையும் சுமாரான வசூலையுமே பெற்று தந்தது.

இந்த படத்திற்கு முன் ஶ்ரீதிவ்யா நடித்த படங்கள் வெற்றி படங்களாக இருந்த போதும் ஶ்ரீதிவ்யாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை இடையில் மூன்று வருட இடைவேளை என்று கிட்டதட்ட சினிமாவை விட்டே காணாமல் போயிருந்தார் ஶ்ரீதிவ்யா .

 Actress sri divya latest pictures

இதன்பின் தற்போதைய நிலையில் ஹீரோயின்கள் கையாண்டு வரும் யுக்தியை இவர் கையில் எடுத்துள்ளார். இன்ஸாடாகிராமில் சீரான இடைவெளியில் தனது அசத்தலான போட்டோசூட்களை செய்து தொடர்ந்து ரசிகர்களுக்கு நான் இருக்கிறேன் என்பதை சொல்லி வருகிறார் ஶ்ரீதிவ்யா . இதன்பின் அதர்வாவின் ஒத்தைக்கு ஒத்த படத்தில் ஒப்பந்தாமாகி நாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

தற்போது ஶ்ரீதிவ்யா கருப்பு நிற ஆடையில் அசத்தலான போட்டோசூட் ஒன்றை நடத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லையே சுமாரா தான், இருக்கீங்க என்று ஶ்ரீதிவ்யாவை கலாய்த்து உள்ளனர் ரசிகர்கள்.

ஶ்ரீதிவ்யாவிற்கு தற்போது 12லட்சத்திற்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை வைத்து பார்க்கும் போது ஶ்ரீதிவ்யா தனது இரண்டாவது இன்னிங்ஸை சரியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஶ்ரீதிவ்யா சமீபத்தில் காதலர் தினத்திற்கு இரும்பு மனிதன் படத்தில் இருந்து வெளியான சிம்பு பாடிய பாடலை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X