கமல்ஹாசனாலே ஒரு மணிநேரம் விடாமல் அழுதேன்.. மெய்யழகன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய ஸ்ரீதிவ்யா
சென்னை: நடிகை ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளவர். இடையில் சில காலங்கள் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியில் உருவாகியுள்ள மெய்யழகன் படத்தில் நாயகியாக களமிறங்கியுள்ளார்.
முன்னதாக 96 என்ற படத்தை கொடுத்துள்ள பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவின் கேரக்டர் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் நேற்றைய தினம் சென்னையில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

மெய்யழகன் படம்: நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள மெய்யழகன் படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் இயக்குனர் பிரேம்குமார் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் பிரேம்குமார், கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று பல சுவாரசியங்களை வழக்கம் போல பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த படத்தில் முன்னதாக ஸ்ரீதிவ்யாவை தங்கச்சி கேரக்டருக்காகவே தான் அணுகியதாக இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதிவ்யா எமோஷனல்: ஆனால் ஸ்ரீதிவ்யா தங்கச்சி கேரக்டரில் நடிக்க முடியாத நிலையில் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் படத்தின் நாயகியாக அவரை நடிக்க வைத்ததாகவும் இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அழகான புடவையில் கலந்து கொண்ட ஸ்ரீ திவ்யா, இந்த படத்தின் பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டார். இந்த படம் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாகவும் படத்தின் பாடல்கள் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் ஸ்ரீதிவ்யா குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடலில் அரவிந்த் சாமியின் ரியாக்ஷனும் தன்னை மிகவும் கவர்ந்ததாக ஸ்ரீதிவ்யா கூறியுள்ளார்.
கமல்ஹாசனால் அழுதேன்: தானும் இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்களை போலவே காத்திருப்பதாகவும் ஸ்ரீதிவ்யா தெரிவித்துள்ளார். 96 படம் மேஜிக் செய்ததை போல மெய்யழகன் என்ன செய்யப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்ள தானும் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.படத்தின் பாடல்கள் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாகவும் இத்தகைய ஆத்மார்த்தமான பாடல்களை கொடுத்த பிரேம்குமார் மற்றும் இசையமைப்பாருக்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக கமல்ஹாசன் இரண்டு பாடல்களை பாடியுள்ள நிலையில் அவரது பாடல் ஒன்றை கேட்ட தான் தொடர்ந்து ஒரு மணி நேரம் அழுது கொண்டிருந்ததாகவும் ஸ்ரீதிவ்யா குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான அன்பிற்காக ஏங்குகிறேன்: அந்த அளவிற்கு அந்த பாடல் தன்னை எமோஷனலாக பாதித்ததாகவும் ஸ்ரீதிவ்யா குறிப்பிட்டுள்ளார். தான் தன்னுடைய சிறுவயது நியாபகத்திற்கு சென்று விட்டதாகவும் தன்னுடைய அம்மாவின் நியாபகம் தனக்கு வந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய அம்மாவின் உண்மையான அன்பை தான் இதுவரை தேடி வருவதாகவும் அது தனக்கு கிடைக்கவில்லை என்றும் பேசிய ஸ்ரீதிவ்யா கண்கலங்கியதை பார்க்க முடிந்தது. அந்தப் பாடலே இப்படி அமைந்த நிலையில் படம் எப்படி அனைவரையும் கவரப் போகிறதோ என்றும் ஸ்ரீதிவ்யா உருக்கம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











