மேக்கப் இல்லாமல் ரசிகர்களை மயக்கும் ஸ்ரீதிவ்யா.. உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்!

ஹைதராபாத் : வாலிபர் சங்கம், காக்கிசட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகப் பிரபலமான நடிகையாக பல ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகை ஸ்ரீதிவ்யா இப்பொழுது மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

2017 பிறகு எந்த ஒரு திரைப்படங்களும் ஸ்ரீதிவ்யாவின் நடிப்பில் வெளியாகாமல் இருக்க அதர்வா மற்றும் கௌதம் கார்த்திக் ஆகிய ஹீரோக்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்காத போதும் சமூகவலைதளங்களில் வெளியிடும் பல புகைப்படங்கள் வைரல் ஆகி வரும் நிலையில் இப்பொழுது துளி கூட மேக்கப் இல்லாமல் எக்கச்சக்க அழகுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மீண்டும் இணையதளத்தை மிரட்டி வைரலாகி வருகிறது.

கனவு கன்னியாக

கனவு கன்னியாக

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக பொன்ராம் அறிமுகமான நிலையில் அந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அனைவரது இதயங்களையும் கொள்ளை கொண்ட ஸ்ரீதிவ்யா தமிழில் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

அதிகம் விரும்பக்கூடிய நடிகை

அதிகம் விரும்பக்கூடிய நடிகை

ஹனுமான் ஜங்ஷன், யுவராஜூ, வீடே ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீதிவ்யா பின் தெலுங்கில் கதாநாயகியாகவும் மனசார,பஸ் ஸ்டாப் ஆகிய திரைப்படங்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு ரசிகர்களால் அதிகம் விரும்பக் கூடிய இளம் நடிகையாக இருக்கிறார்.

கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல்

கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல்

இன்று வரை திரைப்படங்களில் கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் தனித்துவமான நடிப்பு க்யூட்டான எக்ஸ்பிரஸன்கள் என ஒவ்வொரு திரைப்படங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வரும் ஸ்ரீதிவ்யாவுக்கு சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படங்களும் வெளியாகாததால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

விரும்புவதும் இல்லை

விரும்புவதும் இல்லை

அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்த மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படம் என சில திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ரீ திவ்யாவின் நடிப்பு வேட்டை மறுபடியும் தொடங்கியிருக்க ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர். பெரும்பாலான ஹீரோயின்கள் மேக்கப் இல்லாமல் புகைப்படங்களை வெளியிடுவதே இல்லை விரும்புவதும் இல்லை என்ற நிலையில் ஸ்ரீதிவ்யா மட்டும் ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல் நேச்சுரலாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வைரலாகியும் வருகிறார்.

ஸ்ரீதிவ்யாவை தரிசனம்

ஸ்ரீதிவ்யாவை தரிசனம்

இந்நிலையில் கோயிலில் ப்ளூ கலர் சேலையில் சாமி தரிசனம் செய்தவாறு துளி கூட மேக்கப் இல்லாமல் அனைவரையும் அசர வைக்கும் அழகில் க்யூட்டான எக்ஸ்பிரஸன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்ட ஸ்ரீதிவ்யாவை அங்கு சாமி தரிசனம் செய்ய இங்கு ரசிகர்கள் இவரை தரிசித்து ஏகபோகமாக வர்ணித்து "சிவனாண்டி நீ பெத்த மகளாயா" என உருகி உருகி இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X