தேவதை வம்சம் நீயோ... ஸ்ரீ திவ்யாவின் கலக்கலான லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

சென்னை : வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிசட்டை என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதிவ்யா இப்பொழுது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டுமே நடித்து வந்த ஸ்ரீதிவ்யா இப்போது மலையாள திரைத்துறையில் அறிமுகமாக இருக்க முதல் திரைப்படமே சூப்பர்ஸ்டார் நடிகருடன் கைகோர்த்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள ஸ்ரீதிவ்யா சமூக வலைதளங்களில் மேக்கப்பே இல்லாத புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை வர்ணிக்க வைத்து வரும் நிலையில் இப்போது மீண்டும் செம க்யூட்டாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்.

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக

அலட்டிக்கொள்ளாத நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இன்று வரை இருந்து வரும் ஸ்ரீதிவ்யா தமிழில் நடித்தது மிகக் குறைந்த அளவு திரைப்படங்கள் மட்டுமே என்றாலும் அனைத்திலும் தனது முத்திரையை பதித்துள்ளார். தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர் ஹனுமான் ஜங்ஷன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி பின் மனசார திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதர்வாவின் ஒத்தைக்கு ஒத்த

அதர்வாவின் ஒத்தைக்கு ஒத்த

மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் கவர்ச்சி காட்டாமல் இன்று வரை முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பெரிய மவுசு இருப்பதால் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க பல்வேறு போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டும் வருகிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாத நிலையில் இப்பொழுது அதர்வாவின் ஒத்தைக்கு ஒத்த படம் மட்டும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

முக்கியமான வேடத்தில்

முக்கியமான வேடத்தில்

மேலும் இப்பொழுது பல திரைப் படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக சொல்லப்படும் நிலையில் அதில் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் இப்போது மலையாளத்திலும் கால் பதிக்க முதல் அறிமுகமே அசத்தலாக நடிகர் பிரித்திவிராஜ் நடிக்கும் ஜன கன மன திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ

நேர்த்தியான நடிப்பு கவர்ச்சி காட்டாத காட்சிகள் என இதுவரை அனைவருக்கும் பிடித்த சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ரீதிவ்யா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க தொடர்ந்து மேக்கப் இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வர்ணிப்பில் நனைந்து வரும் இவர் இப்பொழுது செம க்யூட்டான காஸ்ட்யூமில் வழக்கம்போல மேக்கப் இல்லாமல் ஸ்டைலான கேப் ஒன்றை போட்டுக்கொண்டு சிம்பிளாக போஸ் கொடுத்து அழகால் அனைவரையும் ஏங்க வைத்திருக்கும் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர பலரும் தேவதை வம்சம் நீயோ என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X