தக் லைஃப் திரிஷா அந்த பாகத்தை காட்ட வேண்டுமா?.. பணம்தானே வேண்டும்.. ஸ்ரீரெட்டி இப்படி பேசிட்டாரே?

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டில் சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமவில் பெரிய புயலை உருவாக்கியவர். சுச்சி லீக்ஸ் சமயத்தில் எப்படி கோலிவுட் எப்படி பற்றி எரிந்ததோ அதேபோல் இவர் நடிகர்கள், இயக்குநர்கள் மீது வைத்த புகாரால் அதே நிலை உருவானது. அதனையடுத்து கொஞ்சம் அமைதியாக இருந்த ஸ்ரீ இப்போது தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு மொழியில் நடிகையாக அறிமுகமானவர். 2011ஆம் ஆண்டே திரைத்துறையில் அறிமுகமாகிவிட்ட அவருக்கு அடுத்ததாக அரவிந்த் 2, ஜிந்தாகி உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் எப்படியாவது திரைத்துறையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்போடு செயல்பட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் புகார்: சினிமாக்களில் அவர் நடித்தபோது ஏகப்பட்ட பிரபல்யத்தைவிடவும்; பாலியல் புகாரை அடுக்கடுக்காக வைத்தபோது ஹெட்லைன்ஸ் ஆனார். முதலில் தெலுங்கு திரையுலகில் பவன் கல்யாண் உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டினார். அவரது அந்தக் குற்றச்சாட்டு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அடுத்ததாக அவர் யாரை கை காண்பிக்கப்போகிறாரோ என்கிற நிலைமைதான் நீடித்துக்கொண்டிருந்தது.

Actress Sri Reddy Criticize Trisha s Dance in Thug Life Movie
Photo Credit:

தமிழில் புயல்: திடீரென அவரது கவனம் கோலிவுட் திரை நட்சத்திரங்கள் மீது திரும்பியது. அதன்படி இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர். சி உள்ளிட்டோர் வாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார்கள் என்று பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்தர். ஆனால் இவற்றில் துளியளவுகூட உண்மையில்லை; விளம்பரத்துக்காக செய்கிறார் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறினார்கள்.

விஷால் மீது குற்றச்சாட்டு: கோலிவுட்டில் இயக்குநர்கள் மட்டுமின்றி இன்னும் சில நடிகர்களையும் விடவில்லை அவர். அந்த வகையில் நடிகர் விஷால் பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார் என்றும்; தன்னையும் அவர் யூஸ் செய்தார் என்றும் எல்லை மீறியே பேசியிருந்தார். அவரது இந்த பாலியல் குற்றச்சாட்டு பெரிய புயலை ஏற்படுத்தியது. ஆனால் விஷால் இதனை மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி விஷால் குறித்து ஸ்ரீரெட்டி பேசிய விஷயம் பெரிய ட்ரெண்டானது.

மார்க் ஆண்டனி விஷால்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில்கூட; விஷால் பற்றி ஸ்ரீரெட்டில் சொன்னதை வைத்து ஒரு காட்சியை அமைத்திருந்ததும்; அது ரசிகர்களிடையே பெரிய கவனத்தையும், கலகலப்பையும் உண்டாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல பரபரப்புகளை கிளப்பிய ஸ்ரீ இப்போது மீண்டும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

ஸ்ரீரெட்டி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "புஷ்பா படத்தில் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடினார். அந்த நடனம் ஆடுவதற்காக அவர் அதிகம் சம்பளம் வாங்கினார்; பில்லா படத்தில் பிகினி உடை போடுவதற்காக நயன்தாரா அதிக சம்பளம் வாங்கினார் என்று சொல்கிறார்கள். அதேபோல் தக் லைஃப் படத்தில் என்ன வேணும் உனக்கு பாடலில் திரிஷா தனது அண்டர் ஆர்மை ஏன் காண்பிக்க வேண்டும். பெரிய ஸ்டார்களுக்கென்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை உணர வேண்டும். இவர்கள் செய்வதை பார்த்து எல்லாமே பணத்துக்குத்தானே என்று மக்கள் திட்டுகிறார்கள்" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X