கல்யாணத்திற்கு முன்னாடி ஜொள்ளு விடுவாங்க.. டாப்லெஸ் புகழ் ஸ்ரீ ரெட்டியின் அடுத்த அக்கப்போர்!

சென்னை: ஸ்ரீ ரெட்டி என்ற பெயரைக் கேட்டதுமே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகமே லைட்டா ஜர்க் ஆயிடுவாங்க. இந்த அளவுக்கு நடிகர்கள், இயக்குநர் என அனைவர் மீதும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை வச்சு பிரபலமானவர் தான் இந்த ஸ்ரீ ரெட்டி. இப்போது பட வாய்ப்பு எதுவுமே இல்லை என்றாலும், இணையத்தில் ஏதாவது ஒரு கருத்தை பதிவு செய்து வரும் இவர் தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் பிறந்த நடிகை ஸ்ரீரெட்டி, 2011 ஆம் ஆண்டு நேனு நன்னா அபடம் என்று தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பின்,அரவிந்த் 2, ஜிந்தகி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால், அந்த படங்கள் பெரியதாக ஓடவில்லை. இதையடுத்து, தனது பயோபிக் படமான ஸ்ரீரெட்டி டைரி என்ற படத்தில் நடித்தார்.

sri reddy instagram video

நடிகை ஸ்ரீ ரெட்டி: சினிமாவில் நடித்து பெயர் எடுக்காத ஸ்ரீ ரெட்டி, படவாய்ப்பு தருவதாக கூறி பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறி தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாண், நாணி மற்றும் பிரபல இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார். அதேபோல, தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஷால், லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் என அனைவர் மீதும் பாலியல் புகாரை கூறியிருந்தார். குற்றச்சாட்டோடு மட்டும் நிற்காத ஸ்ரீ ரெட்டி, நீதி கேட்டு, தெலுங்கு நடிகர் சங்கம் முன்பு மேலாடை இல்லாமல் போராட்டம் நடத்தினார். இதனால், தமிழ், தெலுங்கு சினிமா உலகமே அம்மணி வாயை திறந்து என்னத்த சொல்லப்போகிறாரோ என்ற பயத்தில் இருந்தனர்.

காவல் நிலையத்தில் வழக்கு: இப்படி அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கி வந்த நடிகை ஸ்ரீரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அனிதா ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் அநாகரிகமான கருத்தை தெரிவித்து வருகிறார். இதையடுத்து, நடிகை ஸ்ரீ ரெட்டி மீது குடிவாடா, அனகாபல்லி, ராஜமுந்திரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவர் மீது போலீஸார், வழக்குகளை பதிவு செய்தனர்.

பட்டனை போடுங்க அக்கா: இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி, குட்டி டவுசரை போட்டுக்கொண்டு, சட்டை பட்டனை கழட்டி விட்டு காமெடி வீடியோ செய்கிறேன் என்ற பெயர்களில் கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், திருமணத்திற்கு முன்னாடி போன் பண்ணா சொல்லு.. சொல்லு என்று ஜொள்ளு விட்டு பேசுவார்கள். அதையே கல்யாணத்திற்கு பிறகு போன் செய்தால், சனியனே ஃபோனை வை என்று சொல்வார்கள் என அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார். இது நகைச்சுவை வீடியோ என்று நினைத்துக் கொண்டு சட்டை பட்டனை கழட்டி விட்டு அரை டவுசர் உடன் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்த சிலர் ரசித்து லைக்குகளை போட்டாலும், சிலர் சட்டை பட்டனை போடுங்க அக்கா என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X