பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.. சர்ச்சை நடிகை வெளியிட்ட வீடியோ.. எச்சில் ஊற்றும் ஃபேன்ஸ்!
சென்னை: சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி மண் சட்டியில் மணக்க மணக்க மீன் குழம்பு வைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
லாக்டவுனால் வீட்டிற்குள் இருக்கும் நடிகைகள் தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். சில நடிகைகள் தங்களுக்குள் உள்ள சமையல் கலைஞர்களை வெளிக் கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீரெட்டி வீடியோ
அவர்கள் செய்யும் உணவுகளையும் ரெசிப்பிக்களையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அவர்கள் செய்யும் உணவுகளின் ரெசிப்பிக்களையும் சமூக வலைதளங்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டியும் தான் சமையல் செய்யும் வீடியோவை தனது பேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மீன் குழம்பு
அதில் மண் சட்டியில் மணக்க மணக்க மீன் குழம்பு வைத்துள்ளார் ஸ்ரீரெட்டி. அடுப்பில் மீன் குழம்பு கொதிப்பதையும் அதனை கரண்டியால் கலக்குவதையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டு ஸ்டைல் மீன் குழம்பு சமைத்ததாகவும்.. ரொம்ப எம்மி.. குவாரண்டைன் டிப்ரஷனில் இருந்து வெளி வருவதாகவும் கேப்ஷன் கொடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி.

மிளகாய் தூள் சேருங்கள்
ஸ்ரீரெட்டியின் இந்த மீன் குழம்பு வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் குழம்பை பார்க்கும் போதே சாப்பிடனும் போல் உள்ளது என எச்சில் ஊற்றுகின்றனர். பலர் என்ன மீனை சமைக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் கொஞ்சம் மிளகாய் தூள் சேருங்கள் என அறிவுறுத்தி உள்ளனர்.

சாப்பிட வரலாமா?
இன்னும் சில நெட்டிசன்கள், இந்த மீன் குழம்புக்காகதான் அந்த ரெட் லேபிள் சரக்கா என கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் எச்சில் ஊறுகிறது என்றும் சாப்பிட வரலாமா என்றும் ஸ்ரீரெட்டியிடம் பர்மிஷன் கேட்டுள்ளனர். ஸ்ரீரெட்டியின் சில ரசிகர்கள் மீன் குழம்பை கிளறாதீர்கள், மீன் கரைந்து விடும் என அறிவுறுத்தி உள்ளனர்.

வியப்புடன் பார்க்கும் ரசிகர்கள்
பல்வேறு சர்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. அவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறாத பிரபலங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெரும் சர்ச்சைக்கு ஆளானவர். வழக்கமாக கவர்ச்சி போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு கிறங்கடிக்கும் ஸ்ரீரெட்டி மண் சட்டியில் மீன் குழம்பு வைத்ததை அவரது ரசிகர்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











