என்ன ஆச்சு ஸ்ரீரெட்டி.. வழக்கமா பாலியல் குற்றச்சாட்டுதானே சொல்வீங்க.. இதென்ன புதுப்பழக்கம்!
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டு வரும் வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுவரை ஸ்ரீரெட்டி நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. தற்போது ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி.
சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருந்த தன்னை பலரும் வாய்ப்பு தருவதாக கூறி செக்ஸ்க்கு பயன்படுத்திக் கொண்டதாக பகீர் குற்றச்சாட்டை கூறி பரபரப்பை கிளப்பினார்.

தமிழ் பிரபலங்கள்
தெலுங்கு திரை பிரபலங்கள் மட்டுமின்றி தமிழ் திரைத்துறையினர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி அதிர வைத்தார். நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த். விஷால், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்ட பலரின் பெயரையும் குறிப்பிட்டு தமிழ் சினிமாவை திக்குமுக்காடச் செய்தார்.

சென்னையில்..
சிலர் மீது கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்தும் திடீரென பின்வாங்கினார். தெலுங்கானாவை சேர்ந்த ஸ்ரீரெட்டி, தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.

வழக்கத்திற்கு மாறாக
தொடர்ந்து தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பவன் கல்யாண், நாகார்ஜூனா, சிரஞ்சீவி, ராம்கோபால் வர்மா உள்ளிட்ட பலரையும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். எப்போதும் மற்றவர்களை விமர்சிப்பதும் தரக்குறைவாக பேசுவதையுமே வழக்கமாக கொண்டுள்ள ஸ்ரீரெட்டி கடந்த இரண்டு நாட்களாய் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இன்றும் டிக்டாக்
நேற்று எவ கூட இருக்க என கேட்டு துடைப்பத்தால் அடிக்கும் டிக்டாக் வீடியோவை வெளியிட்டார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில் இன்றும் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.
கல்யாணத்துக்கு முன்னாடி..
அதில் போனில் பேசுவது போன்று பாவனை செய்து உனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி கேர்ள் ஃபிரன்ட் இருந்தாங்களா என கேட்கிறார் ஸ்ரீரெட்டி. மேலும் சண்டைல்லாம் போட மாட்டேன்.. சொல்லு சொல்லு என்று கெஞ்சி கொஞ்சி பேசுகிறார் ஸ்ரீரெட்டி.
காமெடி வீடியோ
மேலும் ஒரு பாடலுக்கு பெட்டில் ஹாயாக படுத்தப்படி லிப் மூவ்மென்ட் மற்றும் பேஸ் ரியாக்ஷனை கொடுத்திருக்கிறார். மற்றொரு காமெடி டிக்டாக் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி.
இதென்ன புதுப்பழக்கம்
அவரது இந்த டிக்டாக் வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், வழக்கமாக மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை கூறுவதுதானே உங்கள் வாடிக்கை. இதென்ன புதுப்பழக்கம் டிக்டாக் வீடியோவையெல்லாம் வெளியிட்டிருக்கிறீர்கள் என்ற கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











