ஸ்பெஷல் பார்ர மிஸ் பண்றேன்.. சரக்கை ஒரே கல்ப்பாக அடித்த சர்ச்சை நடிகை.. வீடியோ வெளியிட்டு பீலிங்!
சென்னை: ஊரடங்கு உத்தரவால் ஹைத்ராபாத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள ஸ்பெஷல் பாரை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. நடிகர்கள், இயக்குநர்கள் என பலர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார்.
இதனால் நாடு முழுக்க பிரபலமனார். ஹைத்ராபாத்தை சேர்ந்த ஸ்ரீரெட்டி, நடிகர்கள் இயக்குநர்கள் என முக்கிய புள்ளிகள் மீது அள்ளி வீசிய குற்றச்சாட்டுக்களால் பலரின் மிரட்டலுக்கு ஆளானார்.

பலான விஷயங்கள்
இதனை தொடர்ந்து சென்னை வளசரவாக்கத்தில் செட்டில் ஆனார் நடிகை ஸ்ரீரெட்டி. தொடர்ந்த ரெட்டியின் டைரி உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பேஸ்புக்கில் அக்டிவாக உள்ள, ஸ்ரீரெட்டி பலான விஷயங்களை பேசி வருகிறார்.

ஜொள்ளுவிடும் பேன்ஸ்
மேலும் முன்னணி நடிகைகள் பலரையும் வீணாக வம்பிழுத்து வருகிறார் ஸ்ரீரெட்டி. அதோடு அரைகுறை ஆடையில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை போட்டு நெட்டிசன்களை சூடேற்றி வருகிறார். ஸ்ரீரெட்டியின் போட்டோக்களை பார்த்த ஜொள்ளு விட்டு வருகிறது அவரது ரசிகர் பட்டாளம்.

கிளாஸில் சரக்கு
கூச்சமே இல்லாமல் கெட்ட வார்த்தைகயும் பேசி வருகிறார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் இருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி இன்று ஒரு பதிவை போட்டு நெட்டிசன்களை மிரள விட்டுள்ளார். அதாவது, கிளாஸில் சரக்கை ஊற்றி ரசித்து ருசித்து குடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மிஸ் பண்றேன்
மேலும் நான் என்னுடைய ஹைத்ராபாத் வீட்டில் உள்ள என்னுடைய ஸ்பெஷல் பாரை மிஸ் செய்கிறேன். என் வீட்டில் உள்ள டிரிங்ஸையும் மிஸ் செய்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் என் வீட்டிற்கு பறந்து செல்வேன்.. என பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி குவாரண்டைனை கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











