ஆண் நண்பருடன் டூயட் பாடி வீடியோ வெளியிட்ட சர்ச்சை நடிகை.. இது எதுல போய் முடிய போகுதோ!?
சென்னை: சர்ச்சைக்கு பெயர் போனவரான நடிகை ஸ்ரீரெட்டி ஆண் ஒருவருடன் டூயட் பாடி வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ரீரெட்டி என்றதுமே சட்டென நினைவுக்கு வருவது அவரது அரை நிர்வாண போராட்டமும் அவர் திரை பிரபலங்கள் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளும் தான் நினைவுக்கு வரும்.
தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பலரும் தன்னுடன் உடல் உறவு கொண்டதாக கூறி பரபரப்பை கிளப்பினர்.

பரபரப்பு
நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், விஷால், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்ட பலரும் அவரது குற்றச்சாட்டு பட்டியலில் இடம்பெற்றனர். இது தமிழ்து சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கண்டமேனிக்கு விமர்சனம்
தொடர்ந்து மற்றவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் ஸ்ரீரெட்டி, மூத்த நடிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களையும் கண்டமேனிக்கு விமர்சித்து வருகிறார்.

ஆண் ஒருவருடன் டூயட்
கடந்த சில நாட்களாய் வழக்கத்திற்கு மாறாக டிக் டாக் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தலை நிறைய முடியுடன் நெற்றியில் குங்குமம் என அசத்தலாய் உள்ள ஒரு இளைஞருடன் டூயட் பாடியிருக்கிறார்.

செக்ஸி ரியாக்ஷன்
நறுமுகையே நறுமுகையே பாடலுக்கு கண்களை மூடி திறந்து செம செக்ஸியாக ரியாக்ஷன் கொடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி. அந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

முடியப்போகிறதோ?
அதனை பார்த்த நெட்டிசன்கள், இது எதில் போய் முடியப்போகிறதோ என்று கமென்ட் பதிவிட்டுள்ளனர். ஆனாலும் அந்த வீடியோவில் ஸ்ரீரெட்டியை விட அந்த இளைஞர் நல்லாவே பர்ஃபாமன்ஸ் செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











