கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட புடவையின் விலை 1.15 லட்சம்.. கெத்துக்காட்டும் ஜான்வி கபூர்!

சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அறிமுகத்தோடு சினிமாவில் அறிமுகமான ஜான்விகபூர் தற்போது தெலுங்கில் தேவரா என்ற படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து பாடல் வெளியாகி படத்தின் மீதான ஆவலை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் தமிழில் அறிமுகமாக இருக்கும் இவர், நிகழ்ச்சி ஒன்றுக்கு அணிந்து வந்த சேலையுடன் அதன் விலையும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

80களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கோலிவுட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு சினிமாவில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து டாப் நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டில் ஆன நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

janhvi kapoor Bollywood saree

ஸ்ரீதேவி மகள்: அம்மா போலவே சினிமா மீது ஆர்வம் கொண்ட ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான தடக் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் நடிகர் அகில் அக்கினேனி நடிக்கும் தீரா என்ற படத்தில் ஜான்வி கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இணையத்தில் ஆக்டிவ்: நடிப்பு மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். குறிப்பாக ஜான்வி தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருவது வழக்கம்.

புடவையின் விலை: அந்த வகையில், இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த நடிகை ஜான்வி கபூர், சிவப்பு நிற ஆர்கன்சா புடவை மற்றும் பச்சை நிற நெட் பிளவுஸ் அணிந்து வந்திருந்தார். அந்த உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், இந்த சேலை குறித்து பெண்கள் இணையத்தில் தேடிய போது, இந்த புடவை மற்றும் பச்சை நிற பேக்லெஸ் பிளவுஸ் பாரம்பரிய உடைகள் லேபிள் டோரனியில் இருந்து வந்தவையாகும். இதற்கு சரோஜா ரமணி புடவை என்றும், சோளிக்கு மயூரி ரமணி பிளவுஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் புடவையின் விலை மட்டும் ரூ 1,15,500 லட்சம் என்றும், பிளவுஸின் விலை ரூ 46,500 என்ற தகவல் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டது தான் இந்த ஆர்கன்சா சிவப்பு புடவையின் தனிச்சிறப்பாகும். இந்த புடவையின் விலையை கேட்ட ரசிகர்கள் ஆத்தாடி இம்முட்டு விலையா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X