உன்னால உலகம் அழகாச்சு.. குட்டி ஸ்கர்ட்டில் நச்சுனு போஸ் கொடுத்த ஸ்ரீதேவி விஜயகுமார்!

சென்னை: விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூன்றாவது மகள் ஸ்ரீ தேவி. குழந்தை நட்சத்திரமாக சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை சூடேத்தும் வகையில் அட்டகாசமான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்

Actress Sridevi Vijayakumar instagram photos trending on social media

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், ஹீரோயினாக இயக்குனர் கதிர் இயக்கத்தில், அஜித்தின் மச்சினன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்த, காதல் வைரஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து, ஜீவாவுக்கு ஜோடியாக தித்திக்குதே, மாதவனுடன் பிரியமான தோழி, தனுஷ் ஜோடியாக தேவதையை கண்டேன் போன்ற படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இவர் தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்தார்.

Actress Sridevi Vijayakumar instagram photos trending on social media

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்: சினிமாவில் பிஸியாக நடித்து வந்த ஸ்ரீதேவி, கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், இவர் தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் 2 படத்திலும், ஒரு கன்னட படத்திலும் நடித்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி வருகிறார்.

Actress Sridevi Vijayakumar instagram photos trending on social media

நச்சுனு நாலு போட்டோ: சமூக வலைத்தளங்களில், ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதேவி, அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் குட்டி ஸ்கர்டை அணிந்து கொண்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். வனிதாவின் தங்கையான ஸ்ரீதேவி, பெரும்பாலும் படத்தில், புடவை அணிந்தே நடித்திருந்தார். ஆனால், தற்போது தொடையை தெரியவிட்டு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், ரசிகர்கள் உன்னால இந்த உலகம் அழகாச்சு என்று கவிதை பாடி வருகின்றனர்.

Actress Sridevi Vijayakumar instagram photos trending on social media

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X