முதல் படத்தில் இருந்தமாதிரியே இருக்காரு.. பிரபாசுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீதேவி விஜய்குமார் பாராட்டு!

சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றி படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சலார், கல்கி 2898 ஏடி படங்களை தொடர்ந்து அடுத்ததாக சுந்தரகாண்டா என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். காமெடி கலாட்டாவாக உருவாகி வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் விருத்தி வாகினி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

பிரபாஸின் முதல் படமான ஈஸ்வர் படத்தின் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி விஜய்குமார் நடித்திருந்தார். இந்நிலையில் பல ஆண்டுகளை கடந்து இந்த ஜோடி மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய நடிகராக மாறியுள்ளது குறித்து நடிகை ஸ்ரீதேவி விஜய்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Prabhas

நடிகை ஸ்ரீதேவி விஜய்குமார்: நடிகை ஸ்ரீதேவி விஜய்குமார் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளவர். தமிழில் மாதவன், ஜீவா உள்ளிட்டவர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்தவர். ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஸ்ரீதேவி விஜய்குமார் பிரபாசுடன் மீண்டும் தெலுங்கு படத்தில் இணைந்துள்ளார். பிரபாஸின் முதல் படமான ஈஸ்வரில் ஹீரோயினாக நடித்தவர் ஸ்ரீதேவி விஜய்குமார். இந்நிலையில் பல ஆண்டுகளை கடந்து இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது.

பிரபாசுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீதேவி விஜய்குமார்: ஸ்ரீதேவியுடன் விருத்தி வாகினியும் இந்த படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். காமெடி களத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சுந்தரகாண்டா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கி வருகிறார். நர ரோகித் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். பிரபாசின் சலார், கல்கி 2898 ஏடி படங்களை தொடர்ந்து உருவாகிவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்றைய தினம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பிரபாஸ் முதல் பட நாயகி: இந்நிலையில் பிரபாஸின் முதல் பட நாயகியான ஸ்ரீதேவி விஜய்குமார் அவரின் கேரக்டர் இத்தனை ஆண்டுகளில் சிறிதும் மாறவில்லை என்று பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய முதல் படமான ஈஸ்வர் படத்தில் எப்படி இருந்தாரோ அதேபோன்ற குணாதிசயங்களுடன் பிரபாஸ் தற்போதும் மிகவும் எளிமையானவராக காணப்படுவதாக ஸ்ரீதேவி விஜயகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது பேர், புகழ் போன்றவை அவரது கேரக்டரில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவி விஜய்குமார் பாராட்டு: பிரபாசின் தொடர்ந்த வெற்றிகள் மற்றும் புகழ் குறித்து பாராட்டியுள்ள ஸ்ரீதேவி விஜய்குமார், மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பது குறித்தும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனிடையே மீண்டும் ரீ-ரிலீசாகவுள்ள ஈஸ்வர் படத்தை பார்க்க தான் மிகுந்த ஆவலுடன் உள்ளதாகவும் ஸ்ரீதேவி விஜய்குமார் தெரிவித்துள்ளார். இதனிடையே சுந்தரகாண்டா படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read more about: prabhas பிரபாஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X