மறுபடியும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்வாரா ஸ்ரீதிவ்யா.. டிரெண்டாகும் #HBDSriDivya!

சென்னை: வருதப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ஸ்ரீ திவ்யாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

ஆயிரம் ருபாய் 10 கிலோ அரிசி TV SERIAL கலைஞர்களுக்கு கொடுத்தார் சிவகார்த்திகேயன் |V-CONNECT|FILMIBEAT

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருதப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமான ஸ்ரீ திவ்யா, தொடர்ந்து அவருடன் காக்கிச்சட்டை, ரெமோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், ஜி.வி. பிரகாஷ், கார்த்தி, விஷால், அதர்வா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ திவ்யா, சிறு வயது முதலே தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். 1993ம் ஏப்ரல் 1ம் தேதி பிறந்த ஸ்ரீ திவ்யா கடந்த 2000ம் ஆண்டு தனது 7 வயதிலேயே கேமரா முன்னாடி நடிக்க வந்துவிட்டார். ஹனுமான் ஜங்சன், யுவராஜா, வீடே உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார்.

நாயகியாக

நாயகியாக

2010ம் ஆண்டு டோலிவுட்டில் ரிலீசான மானசரா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் 2013ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் லதா பாண்டி ரோலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

ஊதா கலரு ரிப்பன்

ஊதா கலரு ரிப்பன்

சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், பள்ளி மாணவியாக லதா பாண்டி எனும் கதாபாத்திரத்தில் அழகா நடித்து அசத்தியிருப்பார் ஸ்ரீ திவ்யா. அதிலும், அந்த படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் பட்டி தொட்டியெங்கும் அந்த நேரத்தில் எல்லா விழாக்களிலும் போடப்பட்டு மிகப்பெரிய வைரலானது.

செம ஜோடி

செம ஜோடி

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை படங்களில் நாயகியாக நடித்த ஸ்ரீ திவ்யா, ரெமோ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். நடிகை ஸ்ரீ திவ்யாவின் சரியான ஆன் ஸ்க்ரீன் ஜோடி என்றால் அது சிவகார்த்திகேயன் தான். இப்போ சிவகார்த்திகேயன் நயன்தாரா, சமந்தா என சென்று விட்ட நிலையில், ஸ்ரீ திவ்யாவுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மற்ற நடிகர்களுடன்

மற்ற நடிகர்களுடன்

விஷ்ணு விஷாலுடன் ஜீவா, மாவீரன் கிட்டு படங்களிலும், விஷாலுடன் மருது படத்திலும், அதர்வாவுடன் ஈட்டி, கார்த்தியுடன் காஷ்மோரா, ஜி.வி. பிரகாஷ் உடன் பென்சில் உள்ளிட்ட படங்களில் மற்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். ஆனால், சமீப காலமாக ஸ்ரீ திவ்யாவுக்கு புதிய பட வாய்ப்புகள் அமையவில்லை.

டிரெண்டிங்

இந்நிலையில், ஸ்ரீ திவ்யாவின் பிறந்த நாளை கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் #HappyBirthdaySriDivya ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். தனுஷ் ரசிகர்கள், சிவகார்த்திகேயன் ரசிகர்கள், விஷ்ணு விஷால் ரசிகர்கள் என பலரும் ஊதா கலரு ரிப்பனை வாழ்த்தி வருகின்றனர். அதர்வாவின் ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடித்து வரும் ஸ்ரீ திவ்யா கோலிவுட்டில் மீண்டும் கொடிகட்டி பறக்க வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X