»   »  சில்லி கொடுக்கா... இது சாப்பாட்டு பேர் இல்லைங்க... நம்ம ஸ்ரீதிவ்யாவோட செல்லப் பேர்!

சில்லி கொடுக்கா... இது சாப்பாட்டு பேர் இல்லைங்க... நம்ம ஸ்ரீதிவ்யாவோட செல்லப் பேர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் வருத்தப் படாமல் தமிழ் ரசிகர்களின் மனதில் குடி புகுந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

முதல் படத்திலேயே வெற்றிப்பட நாயகி என்ற இடத்தைப் பிடித்தார் திவ்யா. விக்ரம்பிரபு ஜோடியாக அவர் நடித்த வெள்ளைக்கார துரையும் வெற்றிப்படமாக அமைந்து விட்டது.

விரைவில், மீண்டும் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக காக்கிச்சட்டைப் படத்தில் நடித்துள்ளார் இவர். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

மியாவ்...

மியாவ்...

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், சிவகார்த்திக்கேயன் ‘மியாவ்' என்றே செல்லமாக திவ்யாவை அழைப்பார். இந்நிலையில், நிஜத்தில் தனது செல்லப் பெயர்கள் குறித்து மனம் திறந்துள்ளார் திவ்யா.

வீட்டிலும் மியாவ் தான்...

வீட்டிலும் மியாவ் தான்...

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் மட்டுமில்லையாம். நிஜத்திலும் கடந்த பத்து வருடங்களாக திவ்யாவை அவரது பெற்றோர் மியாவ் என்று தான் செல்லமாகக் கூப்பிடுகிறார்களாம்.

திவாய்...

திவாய்...

மியாவ் மட்டுமின்றி திவ்யாவுக்கு இன்னும் இரண்டு செல்லப்பெயர்களும் இருக்கிறதாம். அதில் ஒன்று ‘திவாய்'. அதாவது திவ்யா என்பது சுருக்கம் தான் இந்த திவாய்.

சில்லி கொடுக்கா...

சில்லி கொடுக்கா...

மற்றொரு செல்லப்பெயர் ‘சில்லி கொடுக்கா'. அதாவது, திவ்யாவை அவரது வீட்டில் எல்லாரும் பையன் போன்று தான் வளர்த்தார்களாம். அதனால், சின்னப்பையன் எனப் பொருள் படும் வகையில் ‘சில்லி கொடுக்கா' என செல்லமாக அழைப்பார்களாம்.

சந்திரமுகில ஜோதிகா திட்ற மாதிரி இருந்தாலும், இந்த ‘சில்லி கொடுக்கா'வும் நல்லா தான் இருக்கு... மியாவ் !

English summary
Actress Sridivya has so many pet names like 'miyav', Chilly koduka, ect... She said this in an interview
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil