நடிகை ஸ்ரீபிரியா கணவர் ராஜ்குமார் மீது நில மோசடி புகார்

By Sudha

Sripriya
சென்னை: நடிகை ஸ்ரீபிரியாவின் கணவர் ராஜ்குமார் நில மோசடி செய்து விட்டதாக போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், கோவளம் குன்றுக்காடு முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஏ. ரஞ்சன். இவர் காஞ்சீபுரம் போலீசில் ராஜ்குமார் மற்றும் 6 பேர் மீது புகார் கொடுத்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

காஞ்சீபுரம் மாவட்டம் படூர் கிராமத்தில் உள்ள 61 சென்ட் நிலத்தை எனது தந்தை அர்ச்சுனனின் அண்ணன் பாளையம் வாங்கி இருந்தார். 1979-ம் ஆண்டு அந்த நிலத்தை பாளையம் எனது தந்தை அர்ச்சுனனுக்கு விற்றுவிட்டார்.

அந்த சொத்து தற்போது வரை அர்ச்சுனன் குடும்பத்தினரின் பராமரிப்பில் இருந்து வருகிறது. எனது தந்தையின் மறைவுக்கு பிறகு நானும் மற்ற அனுபவஸ்தார்களும் அந்த நிலத்தில் காம்பவுண்டு சுவர் எழுப்பினோம்.

இதற்கிடையே ராஜ்குமார் சேதுபதி (நடிகை ஸ்ரீபிரியாவின் கணவர்) என்பவர் இந்த சொத்துக்கு போலியாக பவர் ஆப் அட்டர்னி பெற்று 2004-ல் அதை ரூ.2 கோடிக்கு வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் நடிகை ஸ்ரீபிரியாவின் கணவர் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் மனுதாரர்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த மே 13-ந்தேதி ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காஞ்சீபுரம் போலீசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் இதற்கும் காஞ்சிபுரம் போலீஸார் மசியவில்லை. வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இதையடுத்து மனுதாரர் ரஞ்சனின் வழக்றிஞர் போலீஸ் டிஜிபியை நேரில் சந்தித்து, காஞ்சிபுரம் குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்தார். உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது குறித்து டிஜிபியிடம் அவர் புகார் கூறினார்.

இதையடுத்து டிஜிபியின் அறிவுறுத்தலின் பேரில், தற்போது 6 பிரிவின் கீழ் ராஜ்குமார் சேதுபதி, அவரது கூட்டாளிகளான ஆர்.எல். டேவிட், என்.கே.வி. கிருஷ்ணா, ஆர். மீனாட்சி, ஆர். ஜாபர்கான், ரிது கோயல், ஈ.மீனாட்சி ஆகியோர் மீது காஞ்சீபுரம் போலீசார் அவசரம் அவசரமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த ராஜ்குமார், நடிகை லதாவின் தம்பி ஆவார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் அம்பிகாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வேறு சில படங்களிலும் தலை காட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X