நானும் நூடுல்ஸ் மண்ட தான்.. நடிகை ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட க்யூட் நூடுல்ஸ் மண்ட புகைப்படங்கள்!

சென்னை : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளவர்.

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருக்க படங்களில் ஆங்காங்கே சில கிளாமர் காட்சிகளை சிதற விட்டு வருகிறார்

இப்பொழுது நானும் நூடுல்ஸ் மண்ட தான் என க்யூட் நூடுல்ஸ் மண்டையை மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கன்னக்குழி அழகு

கன்னக்குழி அழகு

தமிழில் கன்னக்குழி அழகுடன் இருக்கும் நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது கன்னக்குழி அழகுதான்.

டார்லிங்

டார்லிங்

காதலாகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ருஷ்டி டாங்கே அதன்பிறகு யுத்தம் செய், மேகா,டார்லிங்,எனக்குள் ஒருவன்,கத்துக்குட்டி என பல படங்களில் நடித்து வந்தார்.

Recommended Video

SHRUSTI DANGE CONTROVERSIAL INTERVIEW | RAJAVUKKU CHECK MOVIE | FILMIBEAT TAMIL
ஜிவி பிரகாஷ் ஜோடியாக

ஜிவி பிரகாஷ் ஜோடியாக

இதில் டார்லிங் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்று தந்தது. இதில் இவருக்கு ஜோடியாக இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நடித்து இருந்தார். ஜி வி பிரகாஷ் குமாருக்கு ஹீரோவாக இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள ஸ்ருஷ்டி டாங்கே மலையாளம் மற்றும் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து அங்கும் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமாகியுள்ளார் .

சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக

சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக

கடைசியாக தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வந்து சென்றார். இப்பொழுது ஜீ தமிழில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மிகக் கடுமையான போட்டிகள் தனித் தீவு என தன்னுடைய பயணத்தை தொடங்கிய ஸ்ருஷ்டி டாங்கே நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே போட்டியில் இருந்து வெளியேறினார்.

நானும் நூடுல்ஸ் மண்டதான்

நானும் நூடுல்ஸ் மண்டதான்

இப்பொழுது வெத்துவேட்டு பட இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் கதாநாயகியாக புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் இந்த படத்தில் நடிகர் ஸ்ரீகாந்து ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டாவது ஹீரோவாக விஜய் டிவி பப்பு நடித்துள்ளார். திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகி வருகிறது . சமூக வலை தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை குவித்து ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்று வந்த ஸ்ருஷ்டி டாங்கே இப்பொழுது நானும் நூடுல்ஸ் மண்டதான் என சுருள் முடியுடன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X