என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்... நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயின் க்யூட் போட்டோஸ்!

சென்னை : வெள்ளித்திரையில் மட்டும் தோன்றிய நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு சின்னத்திரையிலும் அறிமுகமானார்.

விஷாலின் சக்ரா படத்தை தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் புதிய திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தனது கன்னக்குழி அழகின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே இப்பொழுது பூக்களுக்கு நடுவே நின்று கொண்டுள்ள க்யூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கன்னக்குழி அழகி

கன்னக்குழி அழகி

தனது கன்னக்குழி அழகின் மூலமும் திறமையான நடிப்பின் மூலமும் தனித்துவமான நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ருஷ்டி டாங்கே காதலாகி படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகப்படுத்தப்பட்டார். ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான டார்லிங் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத்தந்தது அதை தொடர்ந்து மேகா இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உண்டாக்கி கொடுத்தது.

Recommended Video

SHRUSTI DANGE CONTROVERSIAL INTERVIEW | RAJAVUKKU CHECK MOVIE | FILMIBEAT TAMIL
கிராமத்து பெண் போலவே

கிராமத்து பெண் போலவே

ஜோதிகா,சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள உடன்பிறப்பே படத்தை இயக்கியுள்ள இயக்குனர் இரா.சரவணன் முதல் திரைப்படமான கத்துக்குட்டி படத்தில் கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே மிகச் சிறப்பாக நடித்திருப்பார். விவசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றிய படமாக வெளியான கத்துக்குட்டியில் நரேன் ஹீரோவாக நடித்து இருக்க அச்சு அசல் கிராமத்து பெண் போலவே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று இருந்தார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

சிறப்புத் தோற்றங்களில்

சிறப்புத் தோற்றங்களில்

கதாநாயகியாக நடித்து வரும் அதே சமயம் ஒரு சில திரைப்படங்களில் சிறப்புத் தோற்றங்களில் குத்துப்பாட்டுளிலும் தோன்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ள நடிகை ஸ்ருஷ்டி விஷால் நடித்து தயாரித்து இருந்த சக்ரா திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். இப்பொழுது ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் புதிய திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். வெத்துவேட்டு பட இயக்குனர் மணிபாரதி இப்படத்தை இயக்கி வர விஜய் டிவி பப்பு இதில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கிறார்.

பூக்களுக்கு நடுவே க்யூட் புகைப்படங்களை

பூக்களுக்கு நடுவே க்யூட் புகைப்படங்களை

இதுவரை பெரிய திரையில் மட்டுமே தோன்றி வந்த ஸ்ருஷ்டி டாங்கே முதல் முறையாக சின்னத்திரையில் சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் தோன்றினார். நிகழ்ச்சி தொடங்கி மிக விரைவிலேயே போட்டியிலிருந்து வெளியேறினார். இப்பொழுது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வரும் இவர் இப்பொழுது பூக்களுக்கு நடுவே நின்றுகொண்டு வெளியிட்டுள்ள க்யூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் "என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்" என பாடி வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X