அய்யய்யோ.. "அதை" காணோம்.. எங்க உங்க ட்ரேட்மார்க்.. நடிகையின் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!
சென்னை: க்யூட் நடிகையான சிருஷ்டி டாங்கேவின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் செம ஷாக்காகியுள்ளனர்.
நடிகை சிருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவின் க்யூட்டான நடிகைகளில் ஒருவர். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான காதலாகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் சிருஷ்டி டாங்கே. குறிப்பாக யுத்தம் செய், மேகா, தர்மதுரை உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு அப்ளாஸை அள்ளியது.

ராஜாவுக்கு செக்
தற்போது இயக்குநர் சேரனுடன் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்துள்ளார் சிருஷ்டி டாங்கே. அந்தப் படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது.

போட்டோக்கள்
தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் உள்ள சிருஷ்டி டாங்கே அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

குழியை காணோம்
அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் அவருடைய ட்ரேட்மார்க்கான கன்னக்குழியை காணவில்லை.

பல்லாங்குழி ஆடலாம்
சிருஷ்டி டாங்கேவை க்யூட்டாக காட்டுவதே அவருடைய கன்னக்குழிதான். சிரிக்கும் போது அவரது கன்னத்தில் விழும் குழியில் பல்லாங்குழியே ஆடலாம் என வர்ணிப்பார்கள் ரசிகர்கள்.
Recommended Video
மறைத்து மேக்கப்
அந்தக் கன்னக்குழிதான் அவரது சிரிப்பை கள்ளம்கபடமில்லாமல் காட்டும். இந்நிலையில் அந்தக் கன்னக்குழியை மறைத்து மேக்கப் போட்டுள்ளார் சிருஷ்டி டாங்கே.

சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ்
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த போட்டோவில் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் டீப் நெக் கவுனில் செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார்

கிறங்கடிக்கும் லுக்..
தலையில் கை வைத்தப்படி செக்ஸி லுக்கில் கிறங்கடித்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே. அவரது போட்டோவை பார்த்து ரசிகர்கள் பலர் ஜொள்ளுவிட்டுள்ளனர்.
குழிய காணோம்
போட்டோக்கள் அனைத்தும் லைக்ஸ்களை அள்ளினாலும் குழியை காணும் என்பதே ரசிகர்களின் வருத்தமாக உள்ளது. சிருஷ்டியின் புதிய போட்டோக்களை பார்த்த இந்த நெட்டிசன், உங்க ட்ரேட்மார்க்கான நீங்க சிரிக்கும்போது கன்னத்துல விழுற குழிய மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.
அழகிய முகம்
உங்களுடைய பார்வை, சிறப்பான உங்கள் உடை, உங்களுடைய அழகிய முகம் அனைத்தும் நன்றாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.
ஹாட் ஏஞ்சல்
ரெட் ஹாட் ஏஞ்சல் என சிருஷ்டி டாங்கேவின் அழகை வர்ணித்திருக்கிறார் இவர்.
பாடிகார்டாக..
அழகான தேவதையே உங்களின் பாடிகார்டாக நான் வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
சிவப்பு ரோஜா..
அற்புதமான சிவப்பு ரோஜா என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











