கருப்பு புடவையில் நச்சுன்னு போட்டோ ஷூட் நடத்திய ஸ்ருஷ்டி டாங்கே!
சென்னை: மேகா,டார்லிங்,கத்துக்குட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.
இப்பொழுது வெத்துவேட்டு பட இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் த்ரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கன்னக்குழி அழகின் மூலம் தமிழ் ரசிகர்களை வசியம் செய்த இவர் இப்பொழுது கருப்பு சேலையில் நச்சுன்னு போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

நேர்த்தியான நடிப்பு
குடும்பப் பாங்கான கதைகளுக்கு தேவையான ஏற்ற முகம் நேர்த்தியான நடிப்பு என தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே காதலாகி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் மேகா இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.. இதில் இடம் பெற்ற புத்தம் புது காலை ரீமேக் பாடல் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. அதைத்தொடர்ந்து ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக டார்லிங் திரைப்படத்தில் நடித்தார். இப்பொழுது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்

சிறிய கதாபாத்திரத்தில்
கன்னக்குழி அழகி என ரசிகர்களால் பெரும்பாலும் வர்ணிக்கப்படும் ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாநாயகியாக இருக்கும் அதே சமயம் கதைகளிலும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கதாநாயகியாக மட்டுமல்லாமல் நல்ல கதாபாத்திரம் என்றால் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வரும் இவர் விஷாலின் சக்ரா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வந்து நிறைவான நடிப்பை தந்து சென்று இருப்பார்.

சர்வைவர் நிகழ்ச்சியில் முதல் ஆளாக
வெள்ளித்திரையில் வெற்றிகரமாக வலம் வந்த இவர் சின்னத்திரையிலும் கலக்க ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றார் . ஆளில்லாத தனித்தீவில் 16 கடுமையான போட்டிகளை கொண்ட வித்தியாசமான நிகழ்ச்சியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சர்வைவர் நிகழ்ச்சியில் முதல் ஆளாக ஸ்ருஷ்டி டாங்கே எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார்.
Recommended Video

கருப்பு சேலையில் நச்சுன்னு
தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் இப்பொழுது ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். வெத்துவேட்டு பட இயக்குனர் மணிபாரதி இப்படத்தை இயக்கி வருகிறார். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் சமீப காலமாக கவர்ச்சி கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தயாராகி வரும் இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி இருக்கிறார் . இந்த நிலையில் கருப்பு சேலையில் நச்சுன்னு ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











