இதுவரை யாரும் பார்த்திராத…ஸ்ருதிஹாசனின் அரிய புகைப்படம் !

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வரும் லாபம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதல்முறையாக இணைந்து நடித்து வருகிறார்.

நடிப்பு, நடனம், பாட்டு என எதுவாயினும் பட்டையைக்கிளப்பும் ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் இந்தியில் வெளியான "யாரா" படத்தில் பல அதீத கவர்ச்சி, நெருக்கமான முத்தக் காட்சிகள் என பார்க்கும் அனைவரையும் திண்டாட வைத்த ஸ்ருதி, இப்பொழுது யாரும் கண்டிராத அரிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக

சூர்யாவுக்கு ஜோடியாக

தேவர் மகன் திரைப்படத்தில் பாடகியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன் அதன்பின் ஹே ராம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்வார். இந்தியில் வெளியான "லக்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இவர் அதைத் தொடர்ந்து தமிழில் "ஏழாம் அறிவு " திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

படுக்கையறை காட்சிகளும்

படுக்கையறை காட்சிகளும்

நடிப்பு, நடனம், பாடல் என அனைத்திலும் வெளுத்துக்கட்டும் ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் இந்தியில் வெளியான "யாரா" திரைப்படத்தில் இதுவரை கண்டிராத அளவிற்கு அதீத கவர்ச்சியும், நெருக்கமான பல முத்தக் காட்சிகளும், படுக்கையறை காட்சிகளும் இடம்பெற்றிருந்த நிலையில் அவை சர்ச்சைக்குரிய பொருளாக பேசப்பட்டது.

புத்தம் புது காலை

புத்தம் புது காலை

நடிகர் விஜய் சேதுபதியின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சமூக அரசியலை பேசியிருக்கும் "லாபம் " திரைப்படத்தில் முதல்முறையாக இணைந்துவரும் ஸ்ருதிஹாசன் அதைத்தொடர்ந்து "புத்தம் புது காலை" என்ற அந்தோலஜி திரைப்படத்திலும், தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் "கிராக்" படத்திலும் நடித்து வருகிறார்.

அரிய புகைப்படத்தை

அரிய புகைப்படத்தை

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு போடுவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகை ஸ்ருதிஹாசன் இப்பொழுது யாரும் அறியாத அரிய புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

பள்ளி சீருடையில்

பள்ளி சீருடையில்

அதில்தான் பள்ளியில் படிக்கும்போது எடுத்துக்கொண்ட குரூப் போட்டோவில் தனது தோழிகளுடன் பள்ளி சீருடையில் கீழே உட்கார்ந்து கொண்டு சிரித்த முகத்துடன் எடுத்துக்கொண்ட இந்த பழமையான நினைவுகளை பகிர்ந்தார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் இப்பொழுது இருப்பதைப் போலவே சிறு வயதிலும் நீங்க க்யூட்டா இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X