ஆக்ரோஷமான ஆட்டம்.. கையை கடித்து கொட்டிய ரத்தம்.. நிஜ நாகினியாக மாறிய நடிகை!

சென்னை: நடிகை சுதா சந்திரன் ஆக்ரோஷமாக அழுது ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இணையத்தில் வைரலான வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது படப்பிடிப்பு காட்சியாக இருக்கலாம் என நினைத்தனர். ஆனால், இது உண்மை என தெரிந்ததும் அந்த நடிகைக்கு என்ன ஆச்சு என அனைவரும் இணையத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்

நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரன் தனது 15 வயதில் விபத்தில் சிக்கினார். இதில், சுதா சந்திரனின் கால் எலும்பு நொறுங்கிவிட்டதால், அவரின் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுக்கப்பட்டு செயற்கையாக கால் பொருத்தப்பட்டு மீண்டும், தனது தன்நம்பிக்கையால் மேடை ஏறி நடனமாடினார். அதன் பின் பரதநாட்டியத்தை மையமாக கொண்ட 'மயூரி' படத்தில் சுதா சந்திரனே கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. அதைத் தொடர்ந்து நடிகையாக மாறிய சுதா சந்திரன், வசந்த ராகம், சின்ன தம்பி பெரிய தம்பி, சின்ன பூவே மெல்ல பேசு என தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அடுத்தடுத்த படத்தில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

Sudha Chandran dancde dancde
Photo Credit:

நடிகைக்கு என்ன ஆச்சு : சினிமா மட்டுமில்லாமல் சீரியலில் கலக்கி வரும் சுதா சந்திரன், தமிழில் டப் செய்து ஒளிபரப்பான நாகினி 1, 2 வில் அட்டகாசமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியலில் இவரின் மேக்கப்பை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்நிலையில், ஒரு மத விழாவில் கலந்து கொண்ட நடிகை சுதா சந்திரன் கட்டுக்கடங்காத ஆக்ரோஷமாக ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், சுதா சந்திரன் அதிகமாக அழுவதையும், தன்னை காயப்படுத்திக் கொள்ளப் போராடுவதையும், கடிக்க வருவதையும் பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை சமாதானப்படுத்துகிறார்கள்.

நாகினியாக மாறிய நடிகை: வெள்ளை மற்றும் சிவப்பு புடவை அணிந்தபடி மத விழாவிற்கு சுதா சந்திரன் வந்து இருந்தார். ஆரம்பத்தில் அமைதியாக அமர்ந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தார். திடீரென நாற்காலியில் அமர்ந்தபடியே கத்தி ஆட ஆரம்பித்தார். உடனே அருகில் இருந்தவர் அவரை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, கதறி அழ தொடங்கிய அவர், திடீரென அருகில் இருந்தவரின் கையை கடிக்க முயன்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான போது, இது சினிமா அல்லது சீரியல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என அனைவரும் நினைத்தனர். பின்னர் அது உண்மையான வீடியோ என தெரிந்ததும் அவரின் ரசிகர்கள் சுதா சந்திரனுக்கு என்ன ஆச்சு என்றும், சிலர் நாகினி சீரியல் வில்லியாக நடித்த சுதா சந்திரன் நாகினியாகவே மாறிவிட்டாரா என்றும் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X