Actress Sukanya: ராமர் கோயில் திறப்புவிழா.. சுகன்யா இசையமைத்து பாடிய பாடல்!

சென்னை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளைய தினம் ராமர் கோயில் கும்பாபிஷேகம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் இந்திய அளவில் பங்கேற்கவுள்ளனர். இந்திய அளவில் ஏராளமான திரைத்துறை மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்றைய தினம் புறப்பட்டு சென்றுள்ளார். சர்வதேச அளவில் இந்த விழா மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது.

இந்த விழாவையொட்டி நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் வருகை தரவுள்ளதால் அயோத்தியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால் தீவிரவாத தடுப்பு படையினர் கமாண்டோ படையினர், மாநில போலீசார் என 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் 11,000க்கும் மேற்பட்ட கேமராக்களும் அயோத்தி முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன. அயோத்தியில் இந்த கோயில் சுமார் 70 எக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

 Actress Sukanya dedicates song to ramar temple in ayodhya

அயோத்தி ராமர் கோயில்: அயோத்தியில் 70 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. நாளை ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மடாதிபதிகள், அரசியல்கட்சித் தலைவர்கள், திரையுலகம் மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள்என 11,000க்கும் மேற்பட்ட விவிஐபிக்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். கோலிவுட்டிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்றைய தினம் விமானம் மூலம் புறப்பட்டு சென்றுள்ளார்.

பிரபலங்கள் பங்கேற்பு: ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள நிலையில், அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட உள்ளன. செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் 11,000க்கும் மேற்பட்ட கேரமராக்கள் அயோத்தி முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறவுள்ள அயோத்தியில் மட்டுமில்லாமல் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உ.பியை ஒட்டியுள்ள நேபாளத்திலும் எல்லைப்பகுதிகளில் தீவிர ரோந்துப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம் முதலே அயோத்தி நகர் முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் மகிழ்ச்சி: ராமர் கோயில் அமைப்பதற்காக 500 ஆண்டுகளாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது இந்த கோயில் சாத்தியப்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நாளைய தினம் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை சுகன்யா, இந்த கும்பாபிஷேகத்தை கொண்டாடும் வகையில் ஜெய் ஸ்ரீராம் என்ற பாடலை எழுதி இசையமைத்து பாடியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில், இந்த பாடல் தன்னுடைய சிறிய பங்களிப்பாக இருக்கும் என்றும் சுகன்யா தெரிவித்துள்ளார்.

சுகன்யா பாடிய பாடல்: இந்தப் பாடலில் ஸ்ரீராமரின் மகிமை, ராமர் கோயிலின் சிறப்பு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ராமாயணத்தின் சுருக்கத்தையும் இந்தப் பாடலில் சுகன்யா இணைத்துள்ளார். தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பாடலை லிரிக் வீடியோ வடிவில் உருவாக்கியுள்ளார் சுகன்யா. தொடர்ந்து பாடலை வீடியோ வடிவில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள சுகன்யா, இந்தப் பாடல்மூலம் தன்னுடைய இசை அறிவை வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X