கமலை பார்த்து உதைப்பேன்னு சொன்னேன்.. சிரிச்சிக்கிட்டே கட்டிப்பிடித்த ரஜினி.. நடிகை சுமித்ரா ஓபன்!
சென்னை: நடிகை சுமித்ரா 70 மற்றும் 80களின் காலகட்டங்களில் முன்னணி நாயகியாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மலையாளத்தில்தான் இவரது அறிமுகம் இருந்தது. முதல் படம் நிர்மால்யம் படத்தில் 14 வயதிலேயே அறிமுகம் ஆனார். இந்தப் படம் சுமித்ராவிற்கு மிகப்பெரிய வரவேற்பையும் விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது.
சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவக்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சுமித்ரா, சிவாஜி கணேசனுடன் அண்ணன் ஒரு கோயில் படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தார் சுமித்ரா. இந்தப்படமும் சுமித்ரா கேரியரில் பெஸ்டாக அமைந்தது.

நடிகை சுமித்ரா: நடிகை சுமித்ரா 70 மற்றும் 80களின் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தன்னுடைய 14வது வயதிலேயே மலையாளத்தில் நிர்மால்யம் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் சுமித்ரா. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தமிழில் அவளும் பெண் தானே என்ற பட வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்தில் விபச்சாரி கேரக்டரில் நடித்துள்ளார் சுமித்ரா. முதலில் தன்னுடைய அப்பா இந்த கேரக்டரை மறுத்ததாகவும் விபச்சாரி என்றால் தன்னுடைய மகளுக்கு அர்த்தம் தெரியாது என்று அவர் கூறியதாகவும் சுமித்ரா குறிப்பிட்டுள்ளார்.
சுமித்ரா என்ட்ரி: இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குருவி தலையில் பனம்பழம் வைத்ததை போல இந்த கேரக்டர் தனக்கு அமைந்ததாக விமர்சனங்களை தான் பெற்றதாகவும் சுமித்ரா கூறியுள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப்படங்களில் தனக்கு பிசியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே சிவாஜி கணேசனுடன் இணைந்து அவரது தங்கையாக நடித்த அண்ணன் ஒரு கோயில் படம் தனக்கு மிகவும் சேலஞ்சிங்காக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் கோர்ட் சீன் மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் நடிப்பதற்கு சிவாஜிதான் மிகப்பெரிய வழிகாட்டியாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கமலை உதைப்பேன்னு சொன்னேன்: இதுபோன்ற பாக்கியம் யாருக்கும் கிடையாது என்றும் அவர் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கமலுக்கு ஜோடியாக நடித்த தான் தொடர்ந்து சிங்காரவேலன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்ததாகவும் சுமி சுமி என்று தன்னை அழைத்துவந்த கமல்ஹாசன் தன்னை மம்மி மம்மி என்று அழைத்ததாகவும் இதையடுத்து ஏய் உதை கிடைக்கும் என்று அவரை தான் மிரட்டியதாகவும் சுமித்ரா தெரிவித்துள்ளார். இதனிடையே நடிகர் ரஜினியுடன் பணக்காரன் படத்தில் அம்மாவாக நடித்ததாகவும் 25 ஆண்டுகள் கழித்து தன்னுடைய அம்மாவை பார்க்கும் ரஜினிகாந்த் உடைந்து அழுவதாக காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிரித்துக் கொண்டே கட்டிப் பிடித்த ரஜினி: ஆனால் இந்தக் காட்சிக்கு ரஜினிகாந்த் அதிக டேக்குகள் வாங்கியதாகவும், தன்னை அம்மா என்று அழுகையுடன் பார்க்க வேண்டிய அவர், சிரித்துக் கொண்டிருந்ததாகவும் சுமித்ரா கூறியுள்ளார். சுமித்ராவை அம்மா என்று தன்னால் கூப்பிட முடியவில்லை என்று ரஜினி கூறியதாகவும் இதனால் பொறுமையிழந்த டைரக்டர், ஆங்கிளை மாற்றி இந்தக் காட்சியை எடுத்ததாகவும் சுமித்ரா தெரிவித்துள்ளார். ஆனாலும் அம்மா என்று அழுகையுடன் தன்னை கட்டிப்பிடித்த ரஜினி, அந்தப் பக்கம் சிரித்துக் கொண்டிருந்ததாகவும் சுவாரஸ்யம் பகிர்ந்துள்ளார் சுமித்ரா.


Click it and Unblock the Notifications











