'எத்தனை முறை பார்த்தாலும் புரியாது அதானே...' 'சில்லுக்கருப்பட்டி' சுனேனாவை கலாய்த்த ரசிகர்
Recommended Video
சென்னை: படங்களின் வெற்றி தோல்வி என்னை அதிகம் பாதிப்பதில்லை என்று நடிகை சுனேனா தெரிவித்துள்ளார்.
தமிழில், காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்பறவை, தெறி உட்பட பல படங்களில் நடித்தார். இப்போது இவர் நடித்த, சில்லுக்கருப்பட்டி என்ற அந்தாலஜி படம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் சுனேனா. அப்போது அவர் கூறும்போது, சில்லுக்கருப்பட்டியில் 'ஹலோ அம்மு' என்ற கதையில் நடித்திருந்தாலும் தனக்குப் பிடித்த கதை 'பிங்க் பேக்'தான் என்று தெரிவித்துள்ளார்.

நிஜ வாழ்க்கை
அவர் மேலும் கூறும்போது, படங்களில் நடிக்க எப்படி தயாராவீர்கள் என்று கேட்கிறார்கள். எந்த கேரக்டர் என்றாலும் நிஜவாழ்க்கையில் இருக்கும் கேரக்டர்களுடன் அதை தொடர்புபடுத்திக் கொள்வேன்.

தோல்வி இல்லை
அவர்களிடம் இருந்து எனது ஸ்டைலை உருவாக்கிக்கொள்கிறேன். படங்களின் வெற்றி தோல்வி என்னை அதிகம் பாதிப்பதில்லை. வெற்றி என்றால் மகிழ்வேன். தோல்வி என்ற ஒன்று இல்லை என்று நினைக்கிறேன். அதை அனுபவம் என எடுத்துக்கொள்கிறேன்.

பத்துமுறை
அதிக முறை பார்த்த படம் பற்றி கேட்கிறார்கள். நான் பத்துமுறைக்கு மேல் பார்த்த ஒரே படம், கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டர்ஸ்டெல்லர்' என்றார். அதற்கு ஒரு ரசிகர், எத்தனை முறை பார்த்தாலும் ஒன்னுமே புரியாது அதனாலதானே' என்று கிண்டலடித்துள்ளார்.

எங்க என் ஃபோன்?
'காலையில் எழுந்ததும் உங்க முதல் எண்ணம் என்னவாக இருக்கும்? என்று ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அதற்கு, 'எங்க என் ஃபோன்?' என்பதுதான் என்று தெரிவித்துள்ள சுனைனா, இப்போது தெலுங்கில் வெப் சீரிஸில் நடித்துவருவதாகவும் அடுத்து பெரிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











