அவரா இவரா கன்பியூஸ் பண்றாங்க பா.. சுனைனா பதிவிட்ட ஒரு போஸ்ட்.. ஒரே களேபரம் தான்!
சென்னை: தெலுங்கில் தனது திரைப்பயணத்தை தொடங்கி தமிழில் நகுலுடன் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. இப்படத்தில் அவரது நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்தது. அதைத்தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். சுனைனாவை தமிழ் சினிமா மறந்திருந்தாலும் ரசிகர்கள் மறப்பதில்லை. தற்போது அவரது காதலன் யார் என்பதை தெரிந்துகொள்வதில் தான் ஆர்வம் அதிகரித்துள்ளது. அவர் சாதாரணமாக போஸ்ட் பதிவிட்டால் கூட நச்சரிக்கின்றனர். ஆனால், சுனைனா தற்போது ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.
திரையுலகை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகைகளும் பீக்கில் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகும். அவர் நடித்த படங்கள் வெற்றியடைகிறதோ இல்லையோ அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களுக்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கும். அதேபோன்று தான் சுனைனா. பேமஸ் ஆன ஹீரோயினாக வராவிட்டாலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பின் மூலம் பாராட்டை பெற்று வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சில்லுக்கருப்பட்டி பெண்களை மிகவும் கவரும் படமாக இருந்தது. இப்படத்தில் அவரது கதாப்பாத்திரத்திற்கு மதிப்பும் மரியாதையும் கூடியது. பெண்களின் பிரச்னைகளை பேசும் படமாக இருந்ததால் ரசிகர்களையும் கவர்ந்தது.

காதலில் விழுந்தேன், யாதுமாகி, மாசிலமாணி, வம்சம், நீர்ப்பறவை, சமர், வன்மம், தெறி, நம்பியார், தொண்டன், காளி, ட்ரிப், கவலை வேண்டாம், லத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் நடித்து பெயர் எடுத்துள்ளார் சுனைனா. அவர் நடித்த படங்கள் பெயர் சொல்லும் படமாக அமையாவிட்டாலும், சில படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. சமீபத்தில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடரில் சுனைனாவின் நடிப்பை பார்த்து பிரபலங்கள் பாராட்டியிருந்தனர். அவர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த ரெஜினா படுதோல்வியை சந்தித்தது. மார்க்கெட் சரிந்தாலும் ஹிட் கொடுக்கும் முனைப்பில் நல்ல கதைகளை செலக்ட் செய்து நடிக்க ஆர்வத்துடன் இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை சுனைனாவின் இணையதள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் தான் காதலில் இருப்பதை உறுதி செய்துள்ளார். கடந்த சில மாதத்திற்கு முன்பு துபாயைச் சேர்ந்த பிரபல யூடியூபரான கலித் அல் அமேரி என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என செய்திகள் வெளியானது. தனது காதலர் கையுடன் தன் கை இருப்பது போன்ற புகைப்படத்தை பூட்டு எமோஜியை பயன்படுத்தி போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் காதலருடன் திருமணம் ஆவப்போதை தான் சுனைனா மறைமுகமாக கூறியுள்ளார் என தெரிவித்தனர்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சுனைனா அவரது காதலன் என்று கூறப்படும் khalid-ன் சமீபத்திய வீடியோவை பகிர்ந்து பிரமோட் செய்துள்ளார். சுனைனாவின் அந்த பதிவினை khalid-ம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் khalid பகிர்ந்த பல வீடியோ பதிவிற்கு சுனைனா ரியாக்ஷன் கொடுத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் எப்போ கல்யாணம் என்று கேட்க தொடங்கிவிட்டனர். முன்னதாக வெளியிட்ட பதிவை தாண்டு கலித் தான் அவரது காதலன் என்பதை நெட்டிசன்கள் உறுதிப்படுத்திவிட்டனர். இதனால், சீக்கிரம் நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம் என்றும் வாழ்த்து மழையால் சுனைனாவை திக்குமுக்காட வைத்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











