அடடா.. அப்போவே இவ்வளவு க்யூட்டா.. நடிகை வெளியிட்ட குழந்தைப் பருவ போட்டோ!

சென்னை: பிரபல நடிகையின் குழந்தைப் பருவ போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு நடிகையான சுனைனா காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.

அந்தப் படம் ஹிட்டாகவே அடுத்தடுத்து வரிசையாக படங்களில் கமிட்டானார். தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.

இரண்டு படங்கள்

இரண்டு படங்கள்

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி வெப் சீரிஸ்களிலும் நடித்தார். கடைசியாக என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்கள் அவரது நடிப்பில் வெளியானது. சில்லுக்கருப்பட்டி படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ட்ரிப், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மஞ்சள் நிற உடையில்

இந்நிலையில் நடிகை சுனைனா தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று அவர் குழந்தையாக இருந்ததும் மற்றொன்று தற்போது உள்ளதாகவும் உள்ளது. மஞ்சள் நிற கவுனில் க்யூட்டாக தரையில் அமர்ந்து சாப்பிடுகிறார் சுனைனா. அதோடு தற்போது மஞ்சள் நிற புடவையில் சேரில் அமர்ந்தப்படி போஸ் கொடுத்துள்ளார்.

ஸ்லிம் ஆயிட்டிங்க

இரண்டு போட்டோக்களையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ள சுனைனா, மஞ்சள் என்னுடைய நிறம். மலை போல் குவிந்திருக்கும் சாப்பாட்டை முடிக்க வேண்டும் என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்திருக்கிறார். அவரது போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட்.. இப்போ ரொம்ப ஸ்லிம் ஆயிட்டிங்க என பதிவிட்டுள்ளனர்.

என் மனைவியை..

என் மனைவியை..

சுனைனாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர், இரண்டாவது முறையாக சில்லுக்கருப்பட்டி படம் பார்த்தேன். என்ன சிறப்பான பர்ஃபாமன்ஸ். பல இடங்களில் என் மனைவியை ஒத்துப் போனீர்கள். இந்தப் படத்தை பார்த்த பிறகு நானும் என் மனைவியும் கைகளை கோர்த்தப்படி ஷாப்பிங் மாலில் நடந்து சென்றோம் என்று சுனைனாவின் சில்லுக்கருப்பட்டி படத்தை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Read more about: sunaina சுனைனா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X