நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு பாஸ்.. உறுதி செய்த சுனைனா.. இந்த முறையும் முகத்தை காட்டலையே!

சென்னை: நடிகை சுனைனா கடந்த 2005ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான குமார் vs குமாரி படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். தமிழில் காதலில் விழுந்தேன் படத்தில் நகுலுடன் இணைந்து என்ட்ரி கொடுத்திருந்தார். முதல் படத்திலேயே தன்னுடைய க்யூட் நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

அடுத்தடுத்து விஜய், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் இல்லாத நிலையே காணப்படுகிறது. அதிரடியான வெற்றியை கொடுக்க முடியாமல் தொடர்ந்து சொதப்பலான படங்களில் நடித்ததன் மூலம் இவரால் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற முடியாத நிலை காணப்படுகிறது.

Sunainaa tamil cinema


நடிகை சுனைனா: நடிகை சுனைனா தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து நகுலுடன் இணைந்து காதலில் விழுந்தேன் என்ற படம் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமான சுனைனா, முதல் படத்திலேயே தன்னுடைய க்யூட்டான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தார். தோழியா என் காதலியா என்ற இந்தப் படத்தின் பாடல், அந்த கால கட்டத்தில் பல காதலர்களின் தேசிய கீதமாக காணப்பட்டது. இந்தப் படத்தில் நகுல் -சுனைனா ஜோடியின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக மாசிலாமணி என்ற படத்திலும் இந்த ஜோடி இணைந்தது.

தமிழ் -தெலுங்கு படங்கள்: தமிழில் அடுத்தடுத்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, வன்மம், தெறி, நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி, ட்ரிப், எஸ்டேட், ரெஜினா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சுனைனா. பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துவரும் சுனைனா, அழகு, நடிப்புத் திறமை என இருந்தும் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுக்க முடியாமல் இதனால் பட வாய்ப்புகளை பெற முடியாமலும் திணறினார். இவரது நநடிப்பில் கடைசியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடரில் இவரது நடிப்பு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.

நிச்சயதார்த்த அறிவிப்பு: இருந்த போதிலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முடியாமல் இருக்கும் சுனைனா தற்போது தன்னுடைய 35வது வயதில் தன்னுடைய திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய காதலரின் கை மீது கையை வைத்தபடி அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதற்கு பூட்டு எமோஜியையும் வெளியிட்டு ரசிகர்களை பல யூகங்களை செய்ய விட்டிருந்தார். தன்னுடைய திருமணம் குறித்து அறிவிக்காமல் இப்படி யூகத்திற்கு விட்டுவிட்டாரே என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது தன்னுடைய நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சுனைனா.


மோதிரம் மாற்றி புகைப்படம்: தற்போதும் தன்னுடைய வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிடாமல் மேலும் அவரது எந்தவித தகவல்களையும் வெளியிடாமல் தங்களது நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளதாக கூறி, மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தன்னுடைய கடைசி பதிவு குறித்து பல கட்டுரைகளை பார்க்க முடிந்ததாகவும் அதனால் தனக்கு நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெளிவு படுத்துவதாகவும் அவர் தற்போது தெரிவித்துள்ளார். தனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள சுனைனா, அதை மிகவும் பெரிதாக நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X