இதுக்கு அவரே பரவாயில்ல.. விவாகரத்தான நடிகர் மீது க்ரஷ் கொண்ட பிரபல நடிகை.. ஷாக்கில் ரசிகர்கள்!
சென்னை: விவாகரத்தான நடிகர் மீது தனக்கு க்ரஷ் என பிரபல நடிகை தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீப காலமாக நடிகைகள் தங்களின் க்ரஷ் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அண்மையில் பரதேசி, பேராண்மை, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சாய் தன்ஷிக்கா, நடிகர் சிம்பு மீது க்ரஷ் உள்ளதாக கூறினார்.
அவரை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விக்கா தனக்கு நடிகர் விஜய் சேதுபதி மீது க்ரஷ் என கூறி அதிர வைத்தார். திருமணமான நடிகர் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக அவர் கூறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகை சுனைனா
இந்நிலையில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை சுனைனா தனது க்ரஷ் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். காதலில் விழுந்தேன் படத்தை தொடர்ந்து, நீர்ப்பறவை, வம்சம், மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்தவர் சுனைனா.

முதல் க்ரஷ் யார்?
இவர் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் சினிமாத் துறையில் உங்களின் முதல் க்ரஷ் யார்? என்று கேள்வி எழுப்பினார்.
பிரபல நடிகர்
அதற்கு பதிலளித்த சுனைனா பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மீதுதான் முதலில் கிரஷ் வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கோய் மில் கயா படம் ரிலீஸான போது அந்தப்படம் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகித்தது என்றும் கூறியுள்ளார் சுனைனா.
இப்போது யார்?
மேலும் அது முதல் க்ரஷ் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வெரி ஃபர்ஸ்ட் என்று டிவிட்டினார். சுனைனாவின் இந்த பதிலை பார்த்த நெட்டிசன்கள், எல்லாருக்கும ரித்திக்கை பிடிக்கும், அதற்கு பிறகு யார்? இப்போது யார் என கேட்டு வருகின்றனர்.

விவாகரத்தானவர்
அதேநேரத்தில் சிலர் ரித்விக்காவே பரவாயில்லை, திருமணமானவர் மீதுதான் க்ரஷ் கொண்டார். நீங்கள் விவாகரத்தானவர் மீது க்ரஷ் இருந்தது என்கிறீர்களே என்று தெரிவித்து வருகின்றனர்,


Click it and Unblock the Notifications











