கடவுளின் தேசத்தில் சன்னி லியோன்.. கணவருடன் காரில் உம்மா.. உம்மா.. வைரலாகும் வீடியோ!

Recommended Video

கேரளாவில் சன்னி லியோன் வைரல் வீடியோ | Actress sunney leone kiss video goes viral

சென்னை: பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் இருப்பதாக கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகையான சன்னி லியோன் கவர்ச்சி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். கவர்ச்சியில் திகட்டும் அளவுக்கு தாராளம் காட்டும் சன்னிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

பல இந்தி படங்களில் கிளாமர் நடிகையாக பிஸியாக நடித்து வருகிறார் சன்னி லியோன். இவர் தமிழில் "வடகறி" படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். மேலும் "வீரமாதேவி" என்ற ஒரு வரலாற்றுப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

கேரளாவில் கவர்ச்சி நடிகை

கேரளாவில் கவர்ச்சி நடிகை

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் கேரளாவுக்கு வருகை தந்துள்ளார். துபாயை தலைமையிடமாக கொண்ட ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை கடந்த 7 ஆம் தேதி கொச்சியில் திறந்து வைக்க அவர் கேரளாவுக்கு வருகை தந்தார்.

காரில் உம்மா

காரில் உம்மா

தனது கணவர் டேனியலுடன் காரில் வந்த சன்னி லியோன் வழக்கம் போல் தனது கவர்ச்சியையும் நாட்டித்தனத்தையும் சேர்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் உதட்டை குவித்து உம்மா உம்மா என முத்தம் கொடுக்க அந்த ரிதத்திற்கு ஏற்ப அவரது கணவர் தனது கூலிங் கிளாஸை ஏற்றி இறக்குகிறார்.

கடவுளின் தேசத்தில்

இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள சன்னி, கடவுளின் சொந்த தேசத்தில் உள்ளேன்.. வந்து கண்டுபிடியுங்கள்.. ஹாஹா என பதிவிட்டுள்ளார்.

12லட்சத்துக்கும் மேல் லைக்ஸ்

12லட்சத்துக்கும் மேல் லைக்ஸ்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

ஸ்தம்பித்த கொச்சி

ஸ்தம்பித்த கொச்சி

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முறையாக சன்னி லியோன் கொச்சிக்கு சென்றார். அப்போது அந்த நகரத்தை சில மணி நேரம் ஸ்தம்பிக்க வைத்தார்.

மம்முட்டியுடன் மதுர ராஜா

மம்முட்டியுடன் மதுர ராஜா

இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் மம்முட்டியுடன் மதுர ராஜா என்ற படத்தில் நடித்தார் சன்னிலியோன். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸானது. அதனை தொடர்ந்து தற்போது கொச்சி சென்றுள்ளார் சன்னி லியோன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X