”குழந்தைகளுக்கு கல்வியை விடவும் முக்கியமானது சில உள்ளது”! மனம் திறந்த அம்மா சன்னி லியோன்!

சென்னை: சன்னி லியோன் பற்றி ஏதாவது கூறுங்கள் என்று பொதுமக்களிடம் மைக்கை நீட்டினால் பெரும்பாலான நபர்கள் சொல்வது அவர் ஒரு நீலப்பட நடிகை, சினிமாக்களின் ஐட்டம் டான்ஸ் ஆட கூடிய நடிகை, குத்து டான்ஸ் ஆட கூடிய நடிகை என்று தான் கூறுவார்கள். ஆனால் சன்னி லியோனை பற்றி கொஞ்சம் கூடுதலாக தெரிந்த நபர்கள் அவர் கைதேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், மூன்று குழந்தைகளுக்கான சிறந்த அம்மா என்றெல்லாம் கூறுவார்கள்.

Sunny Leone

சன்னி லியோன் அண்மையில் தனியார் யூட்டூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்று தனது குழந்தைகளுடன் தான் எவ்வாறு நேரம் செலவழிக்கிறேன் என்பதை பற்றியும், குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பற்றியும், குழந்தைகளுக்கு என்ன மாதிரியான விஷயங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் கூறியுள்ளார். அவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.

Sunny Leone

குடும்ப பழக்க வழக்கம்: "நானும் எனது கணவரும் கூடுமானவரை குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதை விரும்புவோம். நாங்கள் இருவரும் வீட்டில் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, பள்ளிக்கு அவர்களை ஏற்பாடு செய்வது, பள்ளியில் இருந்து மறுபடியும் கூட்டி வருவது போன்ற வேலைகளை இருவருமே செய்வோம். எங்கள் குடும்பத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது அது காலை மற்றும் இரவு உணவுகளை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது. அதேபோல் வார இறுதி நாட்களில் ஒன்றாகவே இருப்போம்‌. நானோ எனது கணவரோ வீட்டில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டால் இருவரில் யாராவது ஒருவர் எங்களுடைய மற்ற வேலைகளை விட்டுவிட்டு குழந்தைகளை பார்த்துக் கொள்வதிலும் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதிலும் மிக கவனமாகவும் தெளிவாகவும் இருக்கிறோம்.

Sunny Leone

நல்ல நினைவுகளைக் கொடுக்க வேண்டும்: குழந்தைகளுக்கு பெற்றோராக நாம் செய்ய வேண்டியது அவர்களுடன் அதிகப்படியான நேரங்களை செலவழிப்பது தான். அப்போதுதான் அவர்களுக்கு நாம் நிறைய நல்ல விஷயங்களை இயல்பிலேயே கற்றுத் தர முடியும். இப்போது நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்கிறோம். அதேநேரத்தில், எங்களால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கு வேலைக்கு ஆட்களை நியமிக்க முடியும். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்வதில்லை. இதனை குழந்தைகள் வளர்ந்த பின்னர் நமது அம்மா அப்பாவால் நம்மை கவனித்துக் கொள்ள வேலைக்கு ஆட்களை நியமித்திருக்க முடியும். ஆனாலும் அவர்கள் நம்முடன் அதிக நேரம் செலவிட்டனர் என்பதை நினைத்துப் பார்க்கையில் அவர்களுக்கு நாம் நிறைய நல்ல நினைவுகளை உருவாக்கியிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்வார்கள்.

Sunny Leone

கல்வியைவிடவும் இது முக்கியம்: குழந்தைகளுக்கு பொய் சொல்ல கூடாது, ஏமாற்றக் கூடாது, திருடக் கூடாது போன்ற குணங்களை சொல்லிக் கொடுக்கவேண்டும். எனது மகளிடம் நான் கூறுவது ஒன்றுதான், அது, நீ படிப்பில் கெட்டிக்காரியாக இருக்கலாம். ஆனால் அதைவிட பெருமையான விஷயம் நீ நல்ல மனிஷியாக இருப்பதே எனக் கூறுவேன்.
Sunny Leone

வாடகைத் தாய்: வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெறும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்ட போது தொடக்கத்தில் அது சரிப்பட்டு வரவில்லை. அதற்கான முயற்சிகள் உண்மையிலேயே மிக நீண்டது. அதன் பின்னர் நாங்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தோம். அதே நேரத்தில் இரண்டு ஆண் குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெறவும் முயற்சிகளை மேற்கொண்டு இருந்தோம். நிஷாவை நாங்கள் தத்தெடுத்தவுடன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற நாங்கள் எடுத்த முயற்சி வெற்றியில் முடிந்தது. இப்போது நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக மகிழ்ச்சியாக இருக்கிறோம். இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறினார்.

Sunny Leone
Sunny Leone
Sunny Leone

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X