Sunny leone: கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் மாறும்.. கொட்டேஷன் கேங் படத்தில் நடித்துள்ள சன்னி லியோன்!
சென்னை: பாலிவுட்டில் கவர்ச்சி கேரக்டர்களிலும் ஐட்டம் பாடல்களிலும் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் கொட்டேஷன் கேங் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் பிரியாமணி, ஜாக்கி ஷெராப், சாரா அர்ஜுன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா தற்போது நடந்து முடிந்துள்ளது.
மும்பையிலிருந்து சென்னை வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சன்னி லியோன், படத்தில் ஜாக்கி ஷெராப் மனைவியாக நடித்துள்ளதாகவும் தன் மீதான இமேஜ் இந்த படத்தின் மூலம் மாறும் என்றும் தெரிவித்துள்ளார். படத்தில் அழுத்தமான கேரக்டரில் தான் நடித்துள்ளதாகவும் அதிகமான ஆக்சன் காட்சிகள் தனக்கு உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நடிகை சன்னி லியோன்: நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் ஐட்டம் பாடல்களிலும் கவர்ச்சி கேரக்டர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழில் உருவாகியுள்ள கொட்டேஷன் கேங் என்ற படத்தில் கேங்ஸ்டராக சன்னி லியோன் களமிறங்கியுள்ளார். படத்தில் சன்னி லியோன் மட்டுமில்லாமல் பிரியாமணி, ஜாக்கி ஷெராப், சாரா அர்ஜுன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். ஃபிலிமினாட்டி என்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி: இந்த நிகழ்ச்சியில் மும்பையில் இருந்து சன்னி லியோன் சென்னை வந்து கலந்து கொண்டார். மேலும் பிரியாமணி உள்ளிட்ட படக்குழுவினர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். இயக்குனர் விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெயிலர் அதிரடியாக தற்போது வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரியாமணி, இந்த படத்தில் தான் காண்ட்ராக்ட் கில்லராக நடித்துள்ளதாகவும் இதுவரை இது போன்ற கேரக்டரை தான் ஏற்றதில்லை என்றும் தெரிவித்துள்ளார். படத்தில் சகுந்தலா என்ற கேங்ஸ்டராக அவர் நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து தெய்வத்திருமகள் படத்தில் நடித்துள்ள சாரா அர்ஜுனும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
கியூட் சன்னி லியோன்: தனக்கும் சாராவிற்கும் தான் அதிகமான காம்பினேஷன் காட்சிகள் படத்தில் உள்ளதாகவும் சாரா, மிகச் சிறப்பாக நடித்துள்ளதாகவும் பிரியாமணி தெரிவித்துள்ளார். சன்னி லியோன் குறித்த வேறொரு இமேஜ் ரசிகர்களுக்கு இருக்கலாம் என்று கூறியுள்ள பிரியாமணி, இந்த படத்தில் அவரது பத்மா கேரக்டர் ரசிகர்களின் எண்ணத்தை மாற்றிவிடும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் அனைவரையும் கவரும் வகையில் க்யூட்டான உடையணிந்து பங்கேற்ற சன்னி லியோன் இந்த படத்தில் தனக்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாகவும் தன்னைப் பற்றிய ரசிகர்களின் கருத்தை இந்த படம் கண்டிப்பாக மாற்றும் என்றும் படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொட்டேஷன் கேங் படம்: காஷ்மீர், மும்பை மற்றும் சென்னையில் நடைபெறுவதாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. கொலை சம்பவத்தை நடத்துவதற்கு ஏலம் விட்டு கொலையாளிகளை தேர்வு செய்வதே கொட்டேஷன் கேங் படத்தின் கதை. படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் படத்தில் பிரியாமணி மற்றும் சன்னி லியோனின் கேரக்டர்கள் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகின்றன. கொலை, போதைப் பொருள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் இந்த படத்தில் கதைக்கலங்களாக கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் இந்தப் படம் மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











