சேலை காற்றில் பறக்க கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுரபி!

சென்னை : விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை சுரபி

தமிழில் கடைசியாக ஜெய்க்கு ஜோடியாக புகழ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ள அடங்காதே ரிலீசுக்கு காத்து கொண்டுள்ளது

இப்போதைக்கு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்திவரும் சுரபி சேலையை காற்றில் பறக்க விட்டு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஹோம்லி லுக்கில் அறிமுகமான

ஹோம்லி லுக்கில் அறிமுகமான

தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் மிகச் சிறந்த நடிகராக உள்ள நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த திரைப்படம் இவன் வேற மாதிரி அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் வெளியான இந்த படத்தை இயக்குனர் சரவணன் இயக்கியிருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகை சுரபி.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

சுரபிக்கு தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கிடைத்தது என்னமோ வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சிறிய வேடம் மட்டுமே. பிரபலமான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றது என்று சொல்லி தெரிய தேவையில்லை அந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சுரபி கடைசியாக ஜெய்க்கு ஜோடியாக புகழ் என்ற படத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் இப்பொழுது தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் உள்ளார்

இலை மறை காய் மறைவாக

இலை மறை காய் மறைவாக

தெலுங்கில் அதிக வாய்ப்புகள் குவிந்து வருவதால் அங்கே கவனம் செலுத்திவரும் இவர் ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு ரூட்டை மாற்றி இலை மறை காய் மறைவாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

Recommended Video

Neelima Rani | Kamal Haasan சார் கிட்ட சொன்னேன் நம்பள | Closecall | Filmibeat Tamil
சேலையை காற்றில் பறக்க விட்டு கவர்ச்சி

சேலையை காற்றில் பறக்க விட்டு கவர்ச்சி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சுரபி நடித்துள்ள திரைப்படம் அடங்காதே . ஜிவி பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தை சண்முகம் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படம் எதிர்பாராத பல சிக்கல்களில் சிக்கி ரிலீசுக்கு தடுமாறிக் கொண்டுள்ளது. இந்தப் படத்தில் சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க இப்பொழுது பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் ரசிகர்கள் இவரை ஹோம்லி ஹீரோயினாக பார்த்து வந்த நிலையில் இப்போது கடற்கரையில் சேலையை காற்றில் பறக்க விட்டு கவர்ச்சி காட்டியவாறு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X