மஞ்ச காட்டு மைனாவாக மாறிய நடிகை சுரபி!

சென்னை: இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை சுரபி

தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் இப்பொழுது மஞ்சள் நிற உடையில் மனதைப் பறிக்கும் உடையில் சுரபியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகிறது

பக்கத்து வீட்டு பெண் போல

பக்கத்து வீட்டு பெண் போல

விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து முதல் முறையாக திரைத்துறையில் காலடி பதித்தவர் நடிகை சுரபி. பார்த்தவுடனேயே பக்கத்து வீட்டு பெண் போல லட்சணமான முகம் கவர்ச்சி காட்டாத நடிப்பு என ரசிகர்களின் மனதை முதல் படத்திலேயே கொள்ளையடித்த சுரபிக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. கமர்சியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இவன் வேற மாதிரி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது சுரபிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது

சிறிய கதாபாத்திரத்தில்

சிறிய கதாபாத்திரத்தில்

தொடர்ந்து கதாநாயகி ரோல்கள் கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருந்த சுரபிக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் வேலையில்லா பட்டதாரியில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து செல்வார். வேலையில்லா பட்டதாரி மிகப்பெரிய வெற்றி பெற்றபோதும் சுரபிக்கு தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஜீவா திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது அதிலும் நடித்திருந்தார்.

பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை

பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை

கடைசியாக நடிகர் ஜெய்க்கு ஜோடியாக புகழ் என்ற படத்தில் நடித்திருப்பார். ஜெய் மற்றும் சுரபியின் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே இந்த படத்தில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இதுவரை தமிழில் நடித்த எந்த ஒரு படத்திலும் சுரபி கவர்ச்சி காட்டாதது தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள அடங்காதே படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இப்படம் பல பிரச்சனைகளால் பல ஆண்டுகளாக வெளியிட முடியாமல் உள்ளது மிக விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Dharsha Gupta பிறந்தநாளில் செய்த நல்ல விஷயம் | Angel Birthday, Cook with Comali
மஞ்ச காட்டு மைனாவாக

மஞ்ச காட்டு மைனாவாக

தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் இவருக்கு மிகப் பெரிய மார்க்கெட் உள்ளது. ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறி அளவான கவர்ச்சியில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து வருகிறார். இந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் உடையில் மனதை கொள்ளையடிக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு மஞ்ச காட்டு மைனாவாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X